மளிகைப் பொருள்களின் எடையில் முரண்பாடு; ஃபேர்பிரைஸ் கடைகளில் பொருள்களின் எடையை அளவிடும் கருவிகள் தினமும் சரிபார்ப்பு

மளிகைப் பொருள்களின் எடையில் முரண்பாடு; ஃபேர்பிரைஸ் கடைகளில் பொருள்களின் எடையை அளவிடும் கருவிகள் தினமும் சரிபார்ப்பு

1 mins read
f857d735-36f3-447a-8721-4acab0c6a001
-

என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் தவறான எடை விவரத்துடன் பொருள்கள் விற்கப்படுவதாக 'டிக்டாக்' சமூக ஊடகத்தில் கடந்த வாரம் குறைந்தது இரண்டு காணொளிகள் வெளியாகின. இதையடுத்து, பொருள்களின் எடையை அளவிடும் கருவிகள் தினமும் சரிபார்க்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் நிறுவனம் கூறியுள்ளது.

நினா மோன்ஸோலேவ்ஸ்கா என்பவர் பிப்ரவரி 5ஆம் தேதி பதிவேற்றிய காணொளியில், நெக்ஸ் கடைத்தொகுதியில் உள்ள ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ராவில் வாங்கிய கோழி இறைச்சியின் எடை 0.165 கிலோகிராம் மட்டுமே இருந்தது. ஆனால் அதில் 0.224 கிலோகிராம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மறுநாளே ஃபேர்பிரைஸ் நிறுவனம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில், அங் மோ கியோவில் உள்ள மற்றொரு ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் பிப்ரவரி 7ஆம் தேதி எடுக்கப்பட்ட வேறொரு காணொளியில், சால்மன் மீனின் எடை 0.296 கிலோகிராம் என குறிப்பிடப்பட்டு இருந்ததைக் காட்டியது. ஆனால் 'Ben1841' எனும் டிக்டிாக் பயனாளர் ஒருவர், அதன் எடை 0.176 கிலோகிராம் மட்டுமே இருப்பதை எடை போட்டு காட்டியிருந்தார்.