மக்கள் கையில் முடிவு: லோ

மக்கள் கையில் முடிவு: லோ

1 mins read
b215f58f-a11f-4611-be0c-de9ff465cf60
-

பாட்­டா­ளிக் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரான லோ தியா கியாங், தாம் அர­சி­ய­லுக்கு மீண்­டும் திரும்­பு­வது குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் கையில் உள்­ளது என்று கூறி­யுள்­ளார்.

பாட்­டா­ளிக் கட்­சிக்கு நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ள­தாக சிலர் கூறு வதால் திரு லோவின் அர­சி­யல் ஓய்வு முடி­வுக்கு வருமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

நாடா­ளு­மன்ற சிறப்­பு­ரி­மை­கள் குழு, பாட்­டா­ளிக் கட்சித் தலை­வர் களி­ட­மும் அக்­கட்­சி­யைச் சேர்ந்த முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரயீசா கானி­ட­மும் நடத்­திய விசா­ரணை அறிக்கை கடந்த வியா­ழக்கிழமை வெளியிடப்­பட்­டது.

நாடா­ளு­மன்­றத்­தில் ரயீசா கான் பொய்­யு­ரைத்­த­தன் தொடர்­பில் இந்த விசா­ரணை நடைெபற்­றது.

2018ல் பாட்­டா­ளிக் கட்­சி­யின் தலை­மைச் ெசய­லா­ளர் பொறுப்­பில் இருந்து லோ வில­கி­னார். இரண்டு ஆண்­டு­களுக்குப் பிறகு அல்­ஜு­னிட் குழுத் தொகுதி நாடாளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யி­ல் இ­ருந்­தும் அவர் வில­கி­னார்.

இந்­நி­லை­யில் ஷின்மின் நாளி­ த­ழுக்குப் பேட்­டி­ய­ளித்­துள்ள திரு லோ, இந்­தச் சிர­ம­மான காலக்­கட்­டத்­தில் பாட்­டா­ளிக் கட்­சியை நிலை­நி­றுத்த தம்மை அழைக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­களைப் பாராட்­டி­னார்.

"என்­னைக் கேட்­பது மக்­க­ளின் உரிமை, ஆனால் கட்­சி­யில் திறன்­மிக்­க­வர்­கள் பலர் உள்­ள­னர். இத­னால் கட்­சி­யைப் பற்றி கவ­லைப்­பட வேண்­டி­ய­தில்லை," என்று திரு லோ தியா கியாங் மேலும் தெரிவித்துள்ளார்.