கடல்கடந்தும் நண்பர்களின் சகோதர பாசம் நிலைத்துள்ளது

கடல்கடந்தும் நண்பர்களின் சகோதர பாசம் நிலைத்துள்ளது

1 mins read
fc13b114-722e-4b28-95f9-58b8eef762ce
-

தந்­தையை இழந்­த­தால் மனச்­சோர்­வுக்கு ஆளா­னார் 17 வயது ஃபர்­ஸானா.

அவ­ருக்­குப் பக்­க­ப­ல­மாக இருந்த அவ­ரின் தோழி­களை தன் உயி­ருள்­ள­வரை மறக்க முடி­யாது என்­கி­றார் ஃபர்­ஸானா.

"நல்ல நண்­பர்­கள் இறை­வன் அளிக்­கும் வரம்," என்­கி­றார் அவர்.

பல சம­யங்­களில் உடல்­ந­லக் குறை­வால் ஒடுங்கி கிடந்த கயல்­வி­ழியை, கண்­ணும் கருத்­து­மாக கவ­னித்­துக்­கொண்­ட­னர் தோழி­கள்.

"நமக்­கா­கவே ஒரு­வர் நேரத்தை ஒதுக்­கு­கி­றார் என்­றால் அதை­விட இவ்­வு­ல­கில் வேறு விலை­ம­திப்­பான பரிசு இல்லை," என்­றார் கயல்­விழி.

பன்­னி­ரண்டு ஆண்டு கால­மாக ஒன்­றாக இருக்­கும் கயல்­விழி கதி­ரொளி, நூருல் ஃபர்­ஸானா, பொன்­மணி பிரி­ய­தர்­ஷனி மூவ­ரும் பெரு­மி­தத்­து­டன் கூறிக்­கொள்­வது, 'நாங்­கள் சகோ­த­ரி­கள்'.

கடல்­க­டந்­தும் நேரங்­க­டந்­தும் இவர்­க­ளது சகோ­த­ரத்­து­வம் நிலைத்­துள்­ளது. கயல்­வி­ழி­யும் பொன்­ம­ணி­யும் இங்­கி­லாந்­தில் படித்­த­போது, சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து ஃபர்­ஸானா ஸ்கைப் வாயி­லாக அவர்­க­ளு­டன் இணை­வார்.

இரு நாடு­க­ளுக்­கி­டையே எட்டு மணி நேர வித்­தி­யா­சம் இருப்­பி­னும், கிடைக்­கும் சந்­தர்ப்­பங்­களில் எல்­லாம் மூவ­ரும் இணை­யம்­வழி உரை­யா­டி­னர்.

அன்­பை­யும், நட்­பை­யும் கொண்­டா­டும் நாளாக மூன்று தோழிகளும் ஆண்டுதோறும் அன்­பர் தினத்­தைக் கொண்­டா­டு­கின்­ற­னர்.

"எதிர்­கா­லத்­தில் எங்­கள் மூவ­ரது வாழ்க்கை வெவ்­வெறு திசை­களில் செல்­ல­லாம். எப்­படி, எங்கே இருந்­தா­லும் இந்த நாளை ஒன்­றா­கத்­தான் கொண்­டா­டு­வோம்," என்று உறு­தி­யா­கக் கூறி­னர் தோழி­கள்.