என்டியுசி: வெள்ளிதோறும் அரிசி, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு 5% கழிவு

என்டியுசி: வெள்ளிதோறும் அரிசி, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு 5% கழிவு

1 mins read
219c62f1-8321-44bb-949f-dc8ce1581893
-

அரிசி, எண்ணெய், காய்கறிகள் போன்ற 100 அத்தியாவசியப் பொருள்களுக்கு 5% கழிவு கொடுக்கவுள்ளது என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனம்.

அனைத்து என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளிலும் 'ஹைப்பர்மார்ட்டுகளிலும்' ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும் இந்த சலுகையை பொதுமக்கள் அனுபவிக்கலாம். மார்ச் 4ஆம் தேதி முதல் இது நடப்புக்கு வரும்.

இந்த புதிய முயற்சி ஃபேர்பிரைஸ் குழுமத்தின் 'ஸ்ட்ரெச் யுவர் டாலர்' திட்டத்தின் ஓர் அம்சமாகும். கொவிட்-19 பெருந்தொற்றுக்கு நடுவே தளவாடத்துறையில் ஏற்படும் சிரமங்கள், உயர்ந்துள்ள எண்ணெய் விலை போன்றவற்றால் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க இத்திட்டம் உதவும் என என்டியுசி ஃபேர்பிரைஸ் நம்புகிறது.

இன்று (பிப்ரவரி 14) முதல் சக்கரை அல்லது பால் இல்லாத காப்பி, தேனீர் ஆகியவற்றின் விலைகள் தனது 80 கோப்பிதியாம், என்டியுசி ஃபூட்ஃபேர் கடைகளிலுமத் தொடர்ந்து இவ்வாண்டு இறுதிவரை 90 காசுக்கு விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சக்கரை அல்லது பால் குறைவான காப்பி, தேனீருக்கும் இது பொருந்தும்.