செய்திக்கொத்து

சிறப்புத் தேவை பயணிகள் பேருந்து ஓட்டுநர்களிடம் உதவி நாடலாம்

சிறப்புத் தேவையுடைய பயணிகளும் பொதுப் பேருந்துகளில் உதவி தேவைப்படும் பராமரிப்பாளர்களும் பேருந்து ஓட்டுநர் கர்களிடம் உதவி நாடலாம் என்று போக்குவரத்துக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்துத் துறையில் உள்ள 6,300 பேருந்து ஓட்டுநர்களுக்கும் அது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. மேற்கூறப்பட்ட பிரிவினருக்கு உதவி தேவைப்படுமாயின், மற்ற பயணிகளும் அது குறித்து பேருந்து ஓட்டுநர்களிடம் தெரியப்படுத்தலாம் என்றும் திரு பே, நேற்று பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதி உறுப்பினர் சக்தியாண்டி சுப்பாட் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் இந்த விவரங்களைச் சொன்னார்.

போக்குவரத்துக்கான நாடாளுமன்றக் குழுவின் தலை வராகவும் உள்ள திரு சக்தியாண்டி, சிறப்புத் தேவையுடைய பிள்ளையுடன் பேருந்தில் ஏற முயன்ற தாயார் ஒருவருக்கு பேருந்து ஓட்டுநர் ஒருவர் உதவி செய்ய முன்வராதது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த திரு பே, சிறப்புத் தேவையுடைய பிள்ளைக்கோ அதன் பராமரிப்பாளருக்கோ உதவி தேவைப்படுகிறதா என்று பேருந்து ஓட்டுநருக்குப் பார்த்த வுடன் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். அதனால்தான் சம்பந்தப்பட்டவர்கள் தயங்காமல் பேருந்து ஒட்டுநரிடம் உதவி கேட்கலாம் என்றார். எல்லாவித பயணிகளும் சுமூகமான பயணத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக, பேருந்து ஓட்டுநர்களுக்கு நாங்கள் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறாம் என்று திரு பே விவரித்தார்.

சிறப்புத் தேவையுடையோரின் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவு

சிறப்புத் தேவையுடையோரின் பராமரிப்பாளர்களுக்குப் பள்ளிக்கு வெளியேயும் ஆதரவு கிடைக்கும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மனநலப் பிரச்சினை உள்ளவர்கள், முதிய நோயாளிகள் போன்றவர்களைப் பராமரிப்பவர்களுக்கு ஆதரவளிக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று சுவா சூ காங் உறுப்பினர் டோன் வீ, ஹவ்காங் உறுப்பினர் டெனிஸ் டான், தொகுதியில்லா உறுப்பினர் ஷஹிரா அப்துல்லா ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.

அப்பர் புக்கிட் தீமாவில் உள்ள கால்வாயில் கடந்த மாதம் 11 வயதான சிறப்புத் தேவையுடைய இரட்டையர் மாண்டு கிடந்தனர். அதன் தொடர்பில் அவர்களின் தந்தை மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக் குப் பிறகு இந்தக் கேள்விகள் மன்றத்தில் எழுப்பப்பட்டு உள்ளன.

எஸ்ஜி எனேபல் அமைப்பின் இணையவாசலில், ஓர் இணைய உதவி வழிகாட்டி உள்ளது என்று குறிப்பிட்ட திரு மசகோஸ், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் எஸ்ஜி எனேபல் அமைப்பும் சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து, சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளுக்காகவும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் உள்ள சேவைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க பணியாற்றி வருகிறது என்றார்.

பாலர்பள்ளிக்குச் செல்லும் சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர்களுக்காக ஒரு வழிகாட்டியை ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி வருகிறது. அது வரும் ஏப்ரலில் தயாராகிவிடும் என்று கூறிய அமைச்சர், பராமரிப்பாளர்களுக்கு ஆதரவளித்தல் என்பது சமூகத்தில் உள்ள அனைவரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் அரசாங்கம் மட்டும் ஈடுபட முடியாது, சமூகத்தினருக்கும் அதில் பங்குண்டு என்றார்.

2020 முதல் 2021 வரை தங்குவிடுதியில் உள்ள 500 ஊழியர்கள் தாக்கப்பட்டனர்

2020 முதல் 2021 வரை தங்குவிடுதியில் வசிக்கும்

550 வெளிநாட்டு ஊழியர்கள் தாக்கப்பட்டனர். கைகலப்புகள், வெளிநாட்டு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கலவரங்கள் மூலம் அவர்கள் காயமடைந்தனர் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று நாடாளுமன்றத் தில் தெரிவித்தார்.

ஊழியர் தங்குவிடுதியில் நிகழும் கைகலப்புகள் பற்றியும் அவற்றைச் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி யும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி உறுப்பினர் ஃபூ மீ ஹார் எழுப்பிய கேள்விக்கு திரு சண்முகம் எழுத்துபூர்வ மாகப் பதிலளித்தார்.

தங்குவிடுதியின் இடர்காப்பு, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் அதன் நடத்துநர்களுடன் காவல்துறை அணுக்க மாகப் பணியாற்றி வருகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், மனிதவள அமைச்சின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான உரிம நிபந்தனைகளின்படி தங்குவிடுதி நடத்துநர்கள் நுழைவுக் கட்டுப்பாடு, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். தங்குவிடுதியில் உதவி தேவை என அழைப்பு வந்து அங்கு செல்லும் காவல்துறையினர் அங்குள்ள நிலவரத்தை மதிப்பிட்டு, தகுந்த நடவடிக்கையை எடுப்பார்கள் என்றும் கூறினார்.

முஸ்லிம் ஜோடிகள் இணையம் மூலம் திருமணப் பதிவை மேற்கொள்ளலாம்

முஸ்லிம் ஜோடிகள் இப்போது தங்கள் திருமண உறுதி மொழியை இணையம் மூலம் எடுத்துக்கொள்வதோடு, திருமணம் தொடர்பான இதர சடங்குகளையும் மெய்நிகராக நடத்திக்கொள்ளலாம். அம்லா எனும் முஸ்லிம் நிர்வாக சட்டத்தில் நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் இது சாத்தியமாகி உள்ளது.

புதிய நிர்வாக நடைமுறைகள், முஸ்லிம் திருமணப் பதிவகம், ஷரியா நீதிமன்றம் அல்லது முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் போன்ற முஸ்லிம் அமைப்புகளுக்கு மேலும் வசதியைக் கொடுக்கும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தத் திருத்தங்களால் சாத்தியமாகும் மின்னிலக்கத் தெரிவுகள் பாரம்பரிய திருமண உறுதிமொழி விழாவுக்கு மாற்றாக இருக்காது என்றும் இந்த இக்கட்டான கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் முஸ்லிம் ஜோடிகள் இணையம் வழி திருமணம் புரிந்துகொள்ள வழி ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் அமைச்சர் விளக்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!