சிங்கப்பூர்-இந்தோனீசிய ஆகாயவெளி உடன்பாடு நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டது

சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தோ­னீ­சி­யா­வுக்­கும் இடையே கையெ­ழுத்­தான ஆகா­ய­வெளி உடன்­பாடு இரு நாடு­க­ளுக்­கி­டையே நில­வும் வலு­வான நீண்­ட­கால உற­வில் மற்­றொரு மைல்­கல் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் வர்­ணித்­துள்­ளார்.

அது இரு­நாட்டு விமா­னப் போக்கு­வ­ரத்­துக்­கு மட்­டு­மல்­லா­மல், அனைத்­து­லக சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து சமூ­கத்­துக்­கும் நன்மை பயக்­கும் ஓர் உடன்­பா­டாக விளங்­கும் என்­றும் அவர் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் அமைச்­சர்­நிலை அறிக்­கை­யில் கூறி­னார்.

விமா­னத் தக­வல் வட்­டா­ரம் குறித்து உறுப்­பி­னர்­கள் சிலர் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு அமைச்­சர்­நிலை அறிக்கை மூலம் பதி­ல­ளித்­தார் திரு ஈஸ்­வ­ரன்.

மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட தனது விமா­னத் தக­வல் வட்­டா­ரத்­தின் மூலம் அடுத்த 25 ஆண்­டு­க­ளுக்கு சிங்­கப்­பூர் அதன் ஆகா­யப் போக்­கு­வ­ரத்து சேவை­க­ளைப் பயன்­படுத்­திக்­கொள்ள இந்­தோ­னீ­சியா அனு­மதி அளிக்­கும்.

இந்த சலு­கை­கள், சாங்கி விமான நிலை­யத்­தின் தற்­போ­தைய மற்­றும் எதிர்­கா­லத் தேவை­க­ளுக்கு போது­மா­ன­தாக இருக்­கும். அத்­து­டன் அது ஆகா­யப் போக்­கு­வ­ரத்து மையம் என்ற சிங்­கப்­பூ­ரின் நிலைப்­பாட்­டுக்­கும் ஆகா­யப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யின் போட்­டித்­தன்­மைக்­கும் வலு சேர்க்­கும் என்­றார் அமைச்­சர்.

சாங்கி விமான நிலை­யத்­துக்கு அரு­கில் உள்ள பாத்­தாம், பிந்­தான், தஞ்­சோங் பினாங் உட்­பட இந்­தோ­னீ­சிய விமான நிலை­யங்­க­ளின் பாது­காப்­பான நிர்­வா­கத்­துக்­கும் இந்த உடன்­பாடு வகை செய்­யும் என்­றும் அவர் விவ­ரித்­தார்.

அடுத்து விமா­னத் தக­வல் வட்­டார உடன்­பாட்­டுக்கு அனைத்­து­லக சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து அமைப்­பின் ஒப்­பு­த­லைப் பெற வேண்­டும். ஒப்­பு­த­லைப் பெற்­ற­தும், இந்­தோ­னீ­சி­யா­வும் சிங்­கப்­பூ­ரும் விமா­னத் தக­வல் வட்­டார உடன்­பாட்டை நடை­மு­றைப்­ப­டுத்­தும் ஏற்­பா­டு­கள் செய்­யப்­படும். பின்­னர் மூன்று உடன்­பா­டு­களும் நடப்­புக்கு வரும் என்றார் அமைச்­சர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!