பொழுதுபோக்குக்காக குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் ஒன்றாக அமர்ந்து சூதாடுவது கூடிய விரைவில் சட்டபூர்வமாக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பொழுதுபோக்குக்காக சூதாடு வது தற்போது சட்டவிரோதமல்ல. இருப்பினும், அதுகுறித்து
சட்டத்தில் தெளிவாகக் குறிப்
பிடப்படவில்லை.
சட்டபூர்வமாக்கப்பட்டால் பொழுதுபோக்குக்காக சூதாடுவது தொடர்பாக எவையெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும். எவை
ஏற்றுக்கொள்ளப்படாது என்பது குறித்து தெளிவாகத் தெரிவிக்கப்படும்.
நேற்று நாடாளுமன்றத்தில் முதல்முறையாக சிங்கப்பூர் சூதாட்டக் கட்டுப்பாட்டு ஆணைய மசோதாவும் சூதாட்டக் கட்டுப்பாட்டு மசோதாவும் வாசிக்கப்
பட்டன.
தற்போது சிங்கப்பூரில் சூதாட்டம் பல்வேறு அரசாங்க அமைப்பு களின் கண்காணிப்பின்கீழ் உள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டமாக்கப்பட்டால் சிங்கப்பூரில் சூதாட்டத் துறை முழுவதும் புதிய சூதாட்டக் கட்டுப்பாட்டு ஆணையத்தின்கீழ் கொண்டுவரப்படும்.
எந்தவித வயது வரம்புமின்றி குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் ஒன்றாக அமர்ந்து பொழுது போக்குக்காக சூதாடுவதைச் சட்டபூர்வமாக்குவது புதிய மசோதாவின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ள முக்கிய மாற்றமாகும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் அல்லது நண்பர்
களுடன் ஒன்றாக அமர்ந்து சூதாடலாம் என்றபோதிலும் அது வர்த்தக முறையில் நடத்தப்படக்கூடாது என்றும் தனிநபர் ஒருவரின் வீட்டில் மட்டுமே சூதாட முடியும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இணையம் மூலம் சூதாட்டத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது. சூதாட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் சாதனங்களை வைத்திருக்க உரிமங்கள் தேவைப்படும் என்ற நிலை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சூதாட்டத்திற்கு அடிமையாகும் நிலையையும் சூதாட்டம் காரணமாக சமூக அளவிலான பிரச்சினைகள் ஏற்படுவதையும் தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பூல்ஸைத் தவிர்த்து சூதாட்டத்தில் ஈடுபட குறைந்தது 21 வயதாக இருக்க வேண்டும் என்று விதிமுறை விதிக்கப்படும். சிங்கப்பூர் பூல்ஸ் வழங்கும் சூதாட்டச் சேவைகளில் ஈடுபட குறைந்தது 18 வயதாக இருக்க வேண்டும்.