ஓமிக்ரான் அலை: சிறார், மூத்தோருக்காக புதிய கொவிட்-19 சிகிச்சை நிலையம்

ஓமிக்ரான் அலை: சிறார், மூத்தோருக்காக புதிய கொவிட்-19 சிகிச்சை நிலையம்

1 mins read
bc47ad7f-40a6-40b8-a83f-aa610f2fc8fe
சிறார், மூத்தோருக்கான புதிய சிகிச்சை நிலையம்.படம்: ஓங் யி காங் ஃபேஸ்புக் -

சிங்­கப்­பூர் எக்ஸ்­போ­வில் சிறார், முதி­ய­வர்­கள் ஆகி­யோ­ருக்­காக புதிய கொவிட்-19 சிகிச்சை நிலை­யம் தொடங்கி வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஓமிக்­ரான் அலையை

முன்­னிட்டு அதி­கம் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய நோயா­ளி­க­ளுக்­குச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் சேவை வழங்­கு­வ­தில் மருத்­து­வ­மனை

களுக்கு உதவி செய்ய இந்த நிலை­யம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய சிகிச்சை நிலை­யம் சிங்­கப்­பூர் எக்ஸ்­போ­வின் ஒன்­ப­தா­வது மண்­ட­பத்­தில் அமைந்­துள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டார்.

நிலை­யத்­தில் சிறு­வர்­க­ளுக்கு ஏறத்­தாழ 600 படுக்­கை­களும் மூத்­தோ­ருக்கு 224 படுக்­கை­களும் இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

டெல்டா கிருமி வகையைவிட ஓமிக்ரான் கிருமி வகை சிறுவர்களைப் பாதிக்கும் சாத்தியம் அதிகம் உள்ளது. எனவே, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்குத் தேவையான சிகிச்சையைப் புதிய நிலையம் வழங்கும் என்று அமைச்சர் ஓங் கூறினார்.