சிங்கப்பூர் ஆகாயப் படைக்கான மேம்படுத்தப்பட்ட எஃப்-16 ரக போர் விமானங்களின் விநியோகம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.அந்த போர் விமானங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்கு சிறப்பான முறையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அடுத்த தலைமுறை எஃப்-35 ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் திட்டம் தொடர்வதாக சிங்கப்பூர் ஆகாயப் படை கூறியது. புதிய எஃப்-16 ரக போர் விமானங்களில் பாதுகாப்பு மிரட்டல்களை அடையாளம் காணும் அம்சங்கள், தாக்குதல் நடத்தும் அம்சங்கள் ஆகியவற்றின் ஆற்றல் மேம்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது. மேம்படுத்தப்பட்ட போர் விமானங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

