நோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு அங்கீகாரம்

நோவா­வேக்ஸ் நிறு­வ­னம் உரு­வாக்­கி­யுள்ள கொவிட்-19 தடுப்­பூசியை 18 மற்­றும் அதற்­கு­ம் மேற்பட்ட வய­து­டை­யோ­ருக்­குப் போட அனு­மதி வழங்கப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 தடுப்­பூசி நிபு­ணர் குழு­வால் பரிந்­து­ரைக்­கப்­பட்ட, 'எம்­ஆர்­என்ஏ ' வகை­யைச் சேராத முதல் கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூசி இது­தான். 'நுவேக்­சோ­விட்' எனும் பெய­ரைக் கொண்ட அத்­த­டுப்­பூ­சிக்கு கிரு­மிப்­ப­ர­வல் கால­கட்­டத்­திற்­கான சிறப்பு நடை­மு­றை­யின்­கீழ் இம்­மா­தம் 3ஆம் தேதி சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் இடைக்­கால அங்­கீ­கா­ரம் வழங்­கி­யது.

இத்­த­டுப்­பூ­சியை மூன்று வார இடை­வெ­ளி­விட்டு இரு­முறை போட்­டுக்­கொள்ள வேண்­டும்.

இன்­னும் சில மாதங்­களில் நுவேக்­சோ­விட் தடுப்­பூ­சி­யின் முதல் தொகுதி சிங்­கப்­பூ­ருக்கு வந்­து­சே­ரும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

18 மற்­றும் அதற்­கு­ம் மேற்பட்ட வய­து­டை­யோ­ருக்­கான கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் பொறுத்­த­மட்­டில், 'எம்­ஆர்­என்ஏ' தடுப்­பூ­சி­க­ளுக்­குப் பதி­லாக ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க மாற்­றாக நுவேக்­சோ­விட் தடுப்­பூசி இருக்­கும் என்று நிபு­ணர் குழு குறிப்­பிட்­டது.

நுவேக்­சோ­விட் தடுப்­பூ­சி­யின் தரம், பாது­காப்பு, செயல்­தி­றன் குறித்து மறு­ஆய்வு செய்­த­தா­க­வும், சிங்­கப்­பூர் மக்­க­ளுக்கு அத­னால் கிடைக்­கும் பலன்­கள், அத­னால் ஏற்­படும் அபா­யத்­தைக் காட்­டி­லும் அதி­கம் என்­றும் சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் தெரி­வித்­தது. நுவேக்­சோ­விட் தடுப்­பூசி அறி­கு­றி­யு­டன் கூடிய கொரோனா தொற்­றுக்கு எதி­ராக கிட்­டத்­தட்ட 90% செயல்­தி­ற­னைக் கொண்­டி­ருப்­ப­தா­க­வும் அது கடு­மை­யான தொற்று ஏற்­ப­டா­மல் 100% தடுப்­ப­தா­க­வும் ஆய்வு முடி­வு­கள் காட்­டின.

ஆல்ஃபா வகை கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ரான இத்­த­டுப்­பூசி­யின் செயல்­தி­றன் சீராக இருந்­த­தாக ஆணை­யம் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!