ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் வெள்ளிதோறும் விலைக்கழிவு

சிங்­கப்­பூ­ரில் உள்ள எல்லா ஃபேர்பி­ரைஸ் பேரங்­கா­டி­க­ளி­லும் மாபெ­ரும் அங்­கா­டி­க­ளி­லும் ஒவ்­வொரு

வெள்­ளிக்­கி­ழ­மை­யும் அரிசி, எண்­ணெய், காய்­க­றி­கள் உள்­ளிட்ட 100 வித­மான பொருள்­களை பொது­மக்­கள் 5 விழுக்­காடு கழிவு விலை­யில் வாங்­க­லாம்.

மார்ச் 4ஆம் தேதி முதல் அவர்­கள் இந்­தச் சலு­கையை அனு­

ப­விக்­க­லாம். ஃபேர்பி­ரைஸ் குழு­மத்­தின் 'ஸ்ட்­ரெச் யுவர் டாலர்' என்­னும் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இந்த விலைக்­க­ழிவு வழங்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 கொள்­ளை­நோய், அதி­க­ரிக்­கும் எண்­ணெய் விலை போன்ற பண­வீக்­கக் கார­ணி­கள் ஆகி­ய­வற்­றால் உய­ரும் வாழ்க்­கைச் செல­வி­னத்­தைச் சமா­ளிப்­ப­தில் பய­னீட்­டா­ளர்­க­ளுக்கு உத­வும் நோக்­கம் கொண்­டது இத்­திட்­டம்.

அத்­து­டன், நேற்று (பிப்­ர­வரி 14) முதல் சிங்­கப்­பூ­ரில் உள்ள 80க்கும் மேற்­பட்ட கோப்­பித்­தி­யாம் மற்­றும் என்­டி­யுசி ஃபுட்ஃபேர் உண­வ­கங்­களில் சில வகை காப்பி மற்­றும் தேநீர் விலை­களை 90 காசாகக் குறைத்துள்ளது இந்த உத­வித் திட்­டம்.

ஆண்­டி­றுதி வரை இந்த குறைக்­கப்­பட்ட, அல்­லது உயர்த்­தப்­ப­டாத விலை நீடிக்­கும்.

மேலும் இவ்­விரு உண­வக நிறு­வ­னங்­களும் இதர வகை­யான காப்­பிக்­கும் தேநீ­ருக்­கும் சில சிற்­றுண்­டிக்­கும் ஆண்­டி­றுதி வரை விலையை உயர்த்­து­வ­தில்லை என உறு­தி­பூண்­டுள்­ளன.

இந்­தச் சலு­கை­கள் தவிர தேவை­யுள்­ளோ­ரு க்­கும் மூத்­தோ­ருக்­கும் தொழிற்­சங்க உறுப்­பி­னர்­க­ளுக்­கும் மலிவு விலை­யில் உணவு வழங்­கும் 'ரைஸ் கார்­டன்' திட்­டம் இந்த ஆண்­டின் இறு­திக்­குள் 40 கடை­க­ளுக்கு விரி­வு­ப­டுத்த இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.

தற்­போது 19 கடை­களில் நடப்­பில் இருக்­கும் 'ரைஸ் கார்­டன்' திட்­டம் காம்­கேர் அட்­டை­தா­ரர்­க­ளுக்கு $1.80 என்­னும் சலுகை விலை­யில் உணவு வழங்­கு­கிறது. ஓர் இறைச்­சி­யு­டன் இரு வகை­யான காய்­க­றி­கள் அந்த உண­வில் இருக்­கும்.

'ஸ்ட்­ரெச் யுவர் டாலர்' திட்­டம் 2007ஆம் ஆண்­டுக்­கும் 2008ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் நிதி நெருக்­கடி நில­வி­ய­போது அறி­மு­கம் செய்­யப்­பட்­டது. பின்­னர், 2010, 2011ஆம் ஆண்­டு­களில் பொரு­ளி­யல் மந்­தம் ஏற்­பட்­ட­தால் மீண்­டும் இத்­திட்­டம் நடப்­புக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

சலு­கை­களை விளக்­கிய ஃபேர்பி­ரைஸ் குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி சியா கியன் பெங், அதி­க­ரித்துள்ள விலை நெருக்­கடி மற்­றும் இடை­யூ­றுக்கு ஆளா­கி­யுள்ள விநி­யோ­கத் தொடர் ஆகி­ய­வற்­றுக்கு இடை­யில் வாழ்க்­கைச் செல­வி­னத்தை மித­மான அள­வில் வைத்­தி­ருப்­பதை குழுமம் நோக்­க­மா­கக் கொண்­டி­ருக்க்­கிறது என்­றார்.

ஏற்­கெ­னவே நடப்­பில் இருக்­கும் முன்­னோ­டித் தலை­மு­றை­யி­னர் மற்­றும் மெர்­டேக்கா தலை­மு­றை­யி­னர், மூத்த குடி­மக்­கள் சமூக சுகா­தார உத­வித் திட்­டத்­தின் நீல­நிற அட்­டை­தா­ரர்­கள் ஆகி­யோ­ருக்கு திங்­கள் முதல் வியா­ழன் வரை வழங்­கப்­பட்டு வரும் சலு­கை­யும் தொட­ரும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

புதி­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள வெள்­ளிக்­கி­ழமை சலுகை உட்­பட எல்லா வகை­யான விலைக்­க­ழிவு திட்­டங்­க­ளின் மூல­மும் பொது­மக்­கள் $12 மில்­லி­யன் வரை இந்த ஆண்­டில் மிச்சப்படுத்த முடி­யும் என கணக்­கி­டப்­பட்டு உள்­ளது.

அரிசி, காய்கறி உட்பட 100 பொருள்களை மார்ச் 4 முதல் 5% தள்ளுபடியில் வாங்கலாம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!