துணிகர நிதி பெறுவதற்கான தகுதிவரம்பில் மாற்றங்கள்: நேற்றுமுதல் நடப்புக்கு வந்தன

கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் பாதிக்­கப்­ப­டு­வோ­ருக்கு உதவ 2020ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட 'துணி­கர நிதி'யைப் பெறு வதற்கான தகு­தி­வ­ரம்பு நேற்று முதல் கடு­மை­யாக்­கப்­பட்டுள்­ளது.

கொவிட்-19 மீட்சி தேசத்தை நோக்­கிய நகர்­வுக்கு ஏற்­ப­வும் பெரி­தும் தேவை­யுள்­ளோ­ருக்கு உதவி சென்­று­சே­ரு­வதை உறுதிப்­

ப­டுத்­த­வும் இந்த மாற்­றம் செய்­யப்­ப­டுவ­தாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சும் சமூக சேவைக்­கான தேசிய மன்­ற­மும் நேற்று கூட்­டா­கத் தெரி­வித்­தன.

கடந்த 2003ஆம் ஆண்டு சிங்­கப்­பூ­ரில் சார்ஸ் நோய் பர­வி­ய­போது இந்த நிதி முதன்­மு­த­லாக அறி­மு­கம் செய்­யப்­பட்­டது.

சார்ஸ் நோய்த் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­கும் உத­வ அப்போது இந்­நிதி அமல் செய்யப் பட்டது.

பின்­னர், கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைச் சமா­ளிக்­கப் பணி­பு­ரிந்த போது பாதிக்­கப்­பட்ட சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­

க­ளுக்­காக இந்த நிதி 2020ஆம் ஆண்டு மீண்­டும் தொடங்­கப்­பட்­டது.

நேர­டி­யா­கப் பாதிக்­கப்­ப­டாத ஊழி­யர்­க­ளுக்­கும் இந்த நிதி உத­விக்­க­ரம் நீட்­டி­யது.

இவர்­கள் தவிர, சேவை­யில் இருந்­த­போது கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் மற்­றும் சமூ­கத் தொண்­டூ­ழி­யர்­களை உள்­ள­டக்­கிய இத­ரக் குழுக்­க­ளுக்­கும் தொற்­றால் மாண்­டோ­ரைச் சேர்ந்­தோ­ருக்­கும் நிதி­யின் உதவி நீண்­டது.

நேற்று முதல் அறிமுகம் கண்ட புதிய மாற்­றங்­க­ளின்­படி, முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட, கொவிட்-19 பணி­யின்­போது நோயா­ளி­களை நேர­டி­யா­கக் கையா­ளக்­கூ­டிய ஊழி­யர்­கள் மட்­டுமே துணி­கர நிதியைப் பெறுவதற்கான தகு­தி­யைப் பெ­று ­வர்.

கொவிட்-19 பணி­யின்­போது கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­படும் முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் மற்­றும் சமூ­கத் தொண்­டூ­ழி­யர்­கள் இனி இதற்­குத் தகு­தி­பெற மாட்­டார்­கள்.

பெரும்­பா­லான கொவிட்-19 தொற்று நோயா­ளி­கள் எந்தவித மான அறி­குறி இன்­றி­யும் இலே­சான அறி­கு­றிக­ளு­ட­னும் வந்து சேருவதால் இந்த மாற்­றம் கொண்டு வரப்­ப­டு­வ­தாக கூட்­ட­றிக்கை குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!