நிதிநிலை அறிக்கையின் தரத்தை மேம்படுத்த நிறுவனங்களுக்கு நிபுணர்கள் பரிந்துரை

சிங்­கப்­பூ­ரில் உள்ள சில நிறு­வ­னங்­க­ளின் நிதி­நி­லைப் பட்­டி­ய­லின் தரத்­தில் குறை­பாடு இருப்­ப­தாக அண்­மை­யில் வெளி­யான அறிக்கை ஒன்றை மேற்­கோள் காட்­டி­யுள்ள நிபு­ணர்­கள், தரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான உள்­ளக நடை­மு­றை­களை நிறு­வ­னங்­கள் வலுப்­ப­டுத்த வேண்­டும் என்று குறிப்­பிட்டுள்­ள­னர்.

கடந்த மாதம் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யில், 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை­யி­லான கால­கட்­டத்­தில் $78.67 பில்­லி­யன் அள­வுக்கு 22,051 தணிக்கை சரிக்­கட்­டல்­கல்­க­ளைச் செய்ய கணக்­காய்­வா­ளர்­கள் பரிந்­து­ரைத்து இருந்­த­னர்.

இங்­குள்ள பங்­குச்­சந்­த­தை­யில் பட்­டி­ய­லி­டப்­பட்ட 412 நிறு­வ­னங்­கள் தொடர்­பா­னவை அவை என்­றும் ஆய்­வ­றிக்கை கூறி­யி­ருந்­தது.

இந்த உத்­தேச சரிக்­கட்­டல்­கள் மூன்று ஆண்­டு­க­ளுக்­கான ஒட்­டு­மொத்த நிகர வரு­வா­யில் கிட்டத்தட்ட $1.15 பில்­லி­யன் அள­வுக்கு நிதி

­நி­லைப் பட்­டி­ய­லில் குறைத்துக் காட்­டப்­படதாக கணக்­கி­யல் மற்­றும் நிறு­வன ஒழுங்­கு­முறை ஆணை­யம் தெரி­வித்­தது. இந்த ஆணை­யம்­தான் ஆய்­வுக்கு ஏற்­பாடு செய்­தது.

பட்­டி­ய­லி­டப்­பட்ட நிறு­வ­னங்­கள் நிதி­நி­லைப் பட்­டி­யல்­க­ளைத் தயார் செய்த பின்­னர் அவை கணக்­கி­யல் தரத்­து­டன் ஒத்­துப்­போ­கின்­ற­னவா என்­பதை கணக்­காய்­வா­ளர்­கள் சோதித்து அறி­வர்.

ஒரு­வேளை தவ­று­கள் இருப்­பின் அவற்­றைச் சரி­செய்­யு­மாறு கணக்­காய்­வா­ளர் பரிந்­து­ரைக்­க­லாம்.

வெளி­யி­டப்­பட்ட ஆய்­வின் கண்­டு­பி­டிப்­பு­கள் பட்­டி­ய­லி­டப்­பட்ட நிறு­வ­னங்­க­ளின் நிதி­நிலை அறிக்கை பற்­றிய கவ­லை­களை எழுப்பி உள்­ள­தாக சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக வர்த்­த­கப் பிரிவு பேரா­சி­ரி­யர் மாக் யுவென் டீன் தெரி­வித்­துள்­ளார்.

கண்­டு­பி­டிக்­கப்­பட்டு சரி­செய்ய பரிந்­து­ரைக்­கப்­பட்­ட­வற்­றில் சுமார் 85 விழுக்­காடு சரி­யான தக­வல்­

க­ளைத் தரக்­கோ­ரும் அள­வுக்கு அடிப்­படை தவ­று­கள் அல்­லது தவ­றாக வகைப்­ப­டுத்­தப்­பட்ட தவ­று­கள்.

மேலும் 44 விழுக்காடு நிகர வரு­வா­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய தவ­று­கள் என்று ஆய்வு அறிக்கை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!