பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் ஒருவர் தண்டனை விதிக்கப் படும் நாளில் 40 மாடி புளோக்கின்கீழ் இம்மாதம் 3ஆம் ேததி மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.
வோங் ஸூன் சியோங், 27, எனப்படும் அவருக்காக அவ ரது தந்தை வோங் லிட் வை, 56, என்பவர் $80,000 பிணைத் தொகை செலுத்தி இருந்தார். இது தொடர்பான மனுவை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம். சூழ்நிலைகளின் அடிப்படையில் அந்த பிணைத் தொகை பறிமுதல் செய்யப் படாது என்று தெரிவித்து உள்ளது.

