தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்புத் திட்டம்: ஏப்ரலில் அமலாகிறது

2 mins read
b24351be-165c-4a5b-9afe-fb46a327314b
பள்ளி மாணவர்களின் சாலைக்கடப்பை ஒழுங்குபடுத்தும் பணி யாளர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தொடக்­க­நிலை மூன்­றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயி­லும் மாண­வர்­க­ளுக்­கான சாலைப் பாது­காப்­புத் திட்­டத்தை வரும் ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து போக்­கு­வ­ரத்­துக் காவல்­து­றை­யி­னர் அறி­மு­கப்­ப­டுத்த இருக்­கின்­ற­னர்.

சாலைப் பகு­தியை மேம்­ப­டுத்த போக்­கு­வ­ரத்­துக் காவல்­து­றை­யின் மும்முனை அணு­கு­மு­றை­யின் ஒரு பகு­தி­யாக இந்­தத் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

மாண­வர்­க­ளி­டையே சாலைப் பாது­காப்பை மேம்­ப­டுத்த கல்வி அமைச்­சு­டன் போக்­கு­வ­ரத்து காவல்­துறை இணைந்து செயல்­ப­டு­கிறது.

இது­தொ­டர்­பாக மாண­வர்­க­ளுக்­கான இணை­யம் வழி நடத்­தப்­படும் திட்­டத்­தின் கேலிச்சித்­தி­ரம், புதிர்ப் போட்டி­கள் ஆகி­யவை மூலம் சாலைப் பாது­காப்பு பற்றி மாண­வர்­க­ளுக்­குக் கற்­பிக்­கப்­படும்.

இந்­தத் திட்­டத்­துக்கு 'சாலைப் பாது­காப்­புச் சவால்' எனப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இதில் நான்கு நிலை­கள் உள்­ளன.

அவற்றை நிறைவு செய்­யும் மாண­வர்­க­ளுக்கு ஜூனி­யர் சாலைப் பாது­காப்பு தூதர் பட்­டம் அளிக்­கப்­படும்.

"தங்­க­ளை­யும் தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளை­யும் பாது­காப்­பாக வைத்­தி­ருக்க அன்­றாட வாழ்­வின் ஒரு பகு­தி­யாக மாண­வர்­களும் ஜூனி­யர் சாலைப் போக்­கு­வ­ரத்­துத் தூதர்­களும் சாலைப் பாது­காப்பு பழக்­கங்­க­ளைக் கொண்­டி­ருக்க வேண்­டும் என்று போக்­கு­வ­ரத்­துக் காவல்­துறை விரும்­பு­கிறது," என்று காவல்­துறை தெரி­வித்­தது.

இத்­திட்­டத்­தில் பங்­கெ­டுக்க விரும்­பு­வோர் ஏப்­ரல் மாதம் முதல் சிங்­கப்­பூர் காவல்­து­றை­யின் இணை­யப்­பக்­கம் மூலம் பங்­கேற்­க­லாம்.

கல்வி, பங்­கேற்பு, அம­லாக்­கம் ஆகி­யவை போக்­கு­வ­ரத்­து காவல்­து­றை­யின் மும்முனை அணு­கு­மு­றை­யின் வெவ்­வேறு பிரி­வு­க­ளா­கும்.

பங்­கேற்பு அணு­கு­மு­றை­யின்­கீழ் போக்கு­வ­ரத்­துக் காவல்­துறை கடந்த ஆண்டு மோட்­டார் சைக்­கி­ளோட்­டி­கள், முதிய பாத­சா­ரி­கள், சிறு­வர்­கள், புதிய ஓட்­டு­நர்­கள் ஆகி­யோ­ருக்­குப் பல திட்­டங்­களை நடத்­தி­யது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மூத்­தோ­ருக்­கான சாலைப் பாது­காப்­புத் திட்­டம் நடத்­தப்­பட்­டது. அதன்­கீழ் மூத்­தோர் நட­வ­டிக்கை நிலை­யங்­களில் சிறப்­பு­ரை­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

நல்ல சாலைப் பாது­காப்பு பழக்­க­ வ­ழக்­கங்­க­ளைப் பற்­றி­யும் கண் பரா­ம­ரிப்பு பற்­றி­யும் மூத்­தோ­ருக்கு நினை­வுப­டுத்த இவை நடத்­தப்­பட்­டன.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் மின் தக­வல்­ப­ல­கை­க­ளி­லும் சாலைப் பாது­காப்பு தொடர்­பான தக­வல்­கள் வெளி­யி­டப்­பட்­டன.

சாலை விதி­மு­றை­களை மீறும் ஓட்­டு­நர்­க­ளைப் பிடிக்க மற்ற அரசு அமைப்­பு­க­ளு­டன் இணைந்து கூட்டு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தாக போக்­கு­வ­ரத்­து காவல்­துறை கூறி­யது.

"சாலைப் பாது­காப்பு அனை­வ­ரின் பொறுப்­பா­கும்.

"தொடர்ந்து நல்ல சாலைப் பாது­காப்பு பழக்­க­வ­ழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டிக்­கும்­படி சாலை­க­ளைப் பயன்­ப­டுத்­தும் அனை­வ­ரி­ட­மும் நாங்­கள் கேட்­டுக்­கொள்­கி­றோம்.

"சிங்­கப்­பூ­ரின் சாலை­கள் பாது­காப்­பா­ன­வை­யா­கத் திகழ அனை­

வ­ரும் பங்­க­ளிக்க வேண்­டும்," என்று போக்­கு­வ­ரத்­து காவல்­துறை கூறி­ உள்ளது.