செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
de5a3e59-f36d-4e1f-8055-f0eb1439df90
-

ஜப்பானியர் ஆக்கிரமிப்பை நினைவுகூரும் கலைப்பொருள்கள்

இரண்­டாம் உல­கப் போரின்­போது பிரிட்­டிஷ் படை­யி­ன­ரும் ஜப்­பா­னி­யப் படை­யி­ன­ரும் எதி­ரும் புதி­ரு­மாக இருந்­தா­லும் அவ்­விரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான உற­வில் கசப்பு இல்லை. குறிப்­பாக, 1900களில் இரு நாடு­க­ளின் தோழ­மைக்கு ஆதா­ர­மாக ஜப்­பா­னி­ய­ரின் கிண்­ணம் ஒன்று சான்­றாக விளங்­கு­கிறது. 1942 பிப்­ர­வரி 15ஆம் தேதி ஜப்­பா­னி­யரின் கட்டுப்பாட்டில் சிங்­கப்­பூர் வந்த­தைக் குறிக்­கும் 80வது ஆண்டு நிறைவை ஒட்டி இன்று தொடங்கும் புதிய கண்­காட்சி ஒன்­றில் இந்­தக் கிண்­ணம் முதன்­மு­த­லா­கப் பொது­மக்­க­ளின் பார்­வைக்கு வைக்­கப்­பட உள்­ளது. இதே­போல, இதற்குமுன் பார்த்­தி­ராத 150 விதமான கலைப்­பொ­ருள்­களும் காட்­சிக்கு வைக்­கப்­பட உள்­ளன. 'பழைய கதை­யில் புதிய வெளிச்­சம்' என்ற பொரு­ளில் நடத்­தப்­ப­டும் கண்­காட்­சிக்­காக இந்த அரிய பொருள்­களை திரு டேவ் கான், திரு­வாட்டி செங் லாய் யீ மற்­றும் திரு சிங் சியாக் கெங் ஆகி­யோர் சேக­ரித்­துத் தந்­துள்­ள­னர். ஃபோர்ட் கேனிங் பார்க்­கிற்கு அடுத்து உள்ள சிங்­கப்­பூர் தேசிய ஆவ­ணக் காப்­ப­கத்­தில் இவை காட்­சிக்­கு வைக்­கப்­படும். ஜூன் மாதம் வரை இவற்றைக் கண்காட்சியில் காணலாம்.

ஆகப்பெரிய முதலீட்டு மோசடி: புதிதாக 18 குற்றச்சாட்டுகள்

நிக்­கல் எனப்­படும் வன்­வெள்ளி வர்த்­த­கத்­து­டன் தொடர்­பு­டைய சிங்­கப்­பூ­ரின் ஆகப்பெரிய முத­லீட்டு மோச­டி ஒன்றில் சம்­பந்தப்பட்ட வர்த்­த­கர் ஒரு­வர் மீது நேற்று 18 புதிய குற்­றச்­சாட்­டு­கள் நீதி­மன்­றத்­தில் சுமத்­தப்­பட்­டன.

இங் யு ஸி எனப்­படும் அவர் என்வி குளோ­பல் டிரே­டிங் மற்­றும் என்வி அசெட் மேனேஜ்­மண்ட் நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ராக உள்­ளார். சட்­ட­வி­ரோ­த­மா­கப் பெற்ற பணத்தை மற்­ற­வர்­க­ளுக்கு அனுப்­பு­வது தொடர்­பான பல்­வேறு குற்­றங்­கள் தொடர்­பில் லஞ்ச ஊழல் தடுப்­புச் சட்­டம், போதைப்­பொ­ருள் கடத்­தல் முறி­ய­டிப்­புச் சட்­டம் மற்­றும் இதர கடி­ன­மாக குற்­றங்­க­ளுக்­கான சட்­டத்­தின்­கீழ் எட்டு குற்­றச்­சாட்­டு­களை அவர் எதிர்­நோக்­கு­கி­றார்.

2020 ஜூன் மாதத்­திற்­கும் 2021 பிப்­ர­வரி மாதத்­திற்­கும் இடை­யில் $35 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட பணத்தை இங் மாற்­றி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. ஹெச்­எஸ்­பிசி வங்­கி­யின் இரண்டு கணக்­கு­கள் மூலம் பல்­வேறு நிறு­வ­னங்­கள், வங்­கி­கள் மற்­றும் தனிப்­பட்­ட­வர்­க­ளின் செல­வு­க­ளுக்­காக அவர் இந்­தத் தொகையை அனுப்­பி­னா­ராம். $12 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட அமெ­ரிக்­கன் எக்ஸ்­பி­ரஸ் கடன்­பற்று அட்டை கட்­ட­ணத்­தைச் செலுத்­த­வும் ஆடம்­பர நகை­களை வாங்­க­வும் இத்­தொகை அனுப்­பப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

அதிகாரிக்கு லஞ்சம்: சிறை

பொதுப் பயனீட்டுக் கழக அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக 'பைப் ஒர்க்ஸ்' என்னும் துணைக் குத்தகை நிறுவனத்தைச் சேர்ந்த திட்ட மேலாளர் ஒருவருக்கு நேற்று ஏழு மாதம். இரண்டு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. கணேசன் சுப்பையா, 52, (படம்) எனப்படும் அவர், கழகத்தின் குத்தகைப் பணிகளை தமது நிறுவனம் பெறுவதற்கு உதவ பல்வேறு சந்தர்ப்பங்களில் அதி காரிக்கு $45,169 லஞ்சம் கொடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. லஞ்சம் பெற்ற அதிகாரி ஜமாலுதீன் முகமது கடந்த நவம்பர் மாதம் தண்டிக்கப்பட்டார்.