கொவிட்-19: 9,028 தொற்றுச் சம்பவங்கள், 1,332 பேர் மருத்துவமனையில்

கொவிட்-19: 9,028 தொற்றுச் சம்பவங்கள், 1,332 பேர் மருத்துவமனையில்

1 mins read
da6f20c7-227a-41c9-98f0-4160ced0018d
சிங்கப்பூரில் திங்கட்கிழமை (பிப்ரவரி 14) நிலவரப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து பத்தாவது நாளாக ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சிங்கப்பூரில் திங்கட்கிழமை (பிப்ரவரி 14) நிலவரப்படி தொற்றுப் பாதிப்பால் மொத்தம் 1,332 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் கொவிட்-19 தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை பத்தாவது நாளாக ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 9,028ஆக உள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 23 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

கொவிட்-19க்கு மேலும் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 155 பேருக்குத் தொற்று உறுதியானது.

வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் திங்கட்கிழமை 1.39 ஆக இருந்தது. அதற்கு முந்தைய நாள் அது 1.46 ஆக இருந்தது.