எஸ்பிஹெச் மீடியா டிரஸ்டுக்கு $180 மி. வரை அரசு நிதி

எஸ்பிஹெச் மீடியா டிரஸ்டுக்கு $180 மி. வரை அரசு நிதி

1 mins read
ad5a9e34-5d79-4abc-b411-9bbbf3330175
-

எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட் அமைப்புக்கு ஆண்டுதோறும் $180 மில்லியன் நிதிவரை வழங்க உள்ளதாக தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.

அண்டுதோறும் இந்த அளவிலான நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முதல் சில ஆண்டுகளில், வழங்கப்படும் நிதியில் சுமார் 40 விழுக்காடு தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தவும், தொழில்நுட்பத் திறனாளர்களை ஈர்க்கவும் பயன்படுத்தப்படும் என அமைச்சர் கூறினார்.

தமிழ், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் பணியாற்றும் செய்தியாளர்களின் ஆற்றலை வளர்க்க எஞ்சிய பணம் ஒதுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

ஐந்து ஆண்டுகள் கழித்து, உதவி நிதி மறுபரிசீலிக்கப்படும் எனக் கூறப்பட்டது.