'1,000 பேர் முழுமையான தடுப்பூசித் தரநிலையை இழந்திருக்கக்கூடும்'

'1,000 பேர் முழுமையான தடுப்பூசித் தரநிலையை இழந்திருக்கக்கூடும்'

2 mins read
8d8a3a23-1fe2-4635-93f7-cd291e244c78
-

சிங்­கப்­பூ­ரில் 'எம்­ஆர்­என்ஏ' அல்­லாத கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளான 'சைனோஃபார்ம்' மற்­றும் 'சைனோ­வேக்-கொரோ­னா­வேக்' போன்­ற­வற்­றைச் செலுத்­திக்­கொண்ட சுமார் ஆயி­ரம் பேர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி செலுத்­தப்­பட்­ட­வர் என்ற தர­

நி­லையை இழந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

திங்­கட்­கி­ழமை அவர்­கள் அந்­தத் தகு­தி­நி­லையை இழந்­தி­ருப்­பர் என்று கரு­து­வ­தா­கச் சுகா­தா­ர மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி கூறி­னார்.

பிப்­ர­வரி 9ஆம் தேதி, அத்­த­கைய 'எம்­ஆர்­என்ஏ' அல்­லாத கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளைச் செலுத்­திக்­கொண்ட சுமார் ஆயி­ரம் பேரின் தர­நிலை பிப்­ர­வரி 14ஆம் தேதி காலா­வ­தி­யா­கும் என்று தெரி­ய­வந்­த­தாக அவர் சொன்­னார்.

கொவிட்-19க்கு எதி­ரான பாது­காப்­பைத் தொடர்ந்து பெறு­வ­தற்கு, கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக் கொள்­ளும்­படி பொது­மக்­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர். பிப்­ர­வரி 14ஆம் தேதி, 18 அல்­லது அதற்கு மேற்­பட்ட வய­து­டை­ய­வர்­கள், முன்­னைய தடுப்­பூசி போட்டுக்கொண்ட 270 நாள்­க­ளுக்­குள் கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும். முழு­மை­யா­கத் தடுப்­பூசி செலுத்­தப்­பட்­ட­வர் என்ற தர­நி­லை­யைத் தக்­க­வைத்­துக்கொள்ள அது

அவ­சி­யம்.

அவ்­வாறு செய்­யத் தவ­றி­ய­வர்­கள், உண­வ­கங்­களில் அமர்ந்து உண்ண இய­லாது; திரை­ய­ரங்­கு­கள், கடைத் தொகு­தி­கள், நூல­கங்­கள் ஆகி­ய­வற்­றுக்­குச் செல்ல இய­லாது. தடுப்­பூசி அடைப்­ப­டை­யி­லான பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­க­ளின்கீழ் அவர்­க­ளுக்கு அதற்­கான அனு­மதி இல்லை.

'சைனோஃபார்ம்' மற்­றும் 'சைனோ­வேக்-கொரோ­னா­வேக்' தடுப்­பூ­சி­களை மூன்று முறை செலுத்­திக்­கொள்ள வேண்­டும். மூன்­றா­வது ஊசி செலுத்­தி­ய­தில் இருந்து 3 மாதங்­கள் கழித்­துக் கூடு­தல் தடுப்­பூசி செலுத்­தி­னால் மட்­டுமே முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்டுக்­கொண்­ட­வர் என்ற தர­

நி­லை­யைத் தக்­க­வைத்­துக்கொள்­ள­லாம் என்­ப­தைச் சுகா­தார அமைச்சு முன்­னரே தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தது.

'ஃபைசர்', 'மொடர்னா' தடுப்­

பூ­சி­களை இரண்டு முறை போட்டுக்கொண்­டோர், இரண்­டா­வது ஊசி போட்ட 5 மாதங்­க­ளுக்­குப் பிறகு கூடு­தல் தடுப்­பூசி போட்டுக்­கொள்ள வேண்­டும்.

'எம்­ஆர்­என்ஏ' அல்­லாத கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் குறித்த கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்து டாக்­டர் ஜனில் நாடா­ளு­மன்­றத்­தில் பேசி­னார். அவற்றை 12 முதல் 17 வய­தி­ன­ருக்­குப் பயன்­ப­டுத்­து­வது குறித்­துக் கேட்­கப்­பட்­டது. அது ஆய்­வுத் திட்­டத்­தில் பங்­கேற்­ப­வ­ருக்கு மட்­டுமே இய­லும் என்று கூறிய டாக்­டர் ஜனில், உல­கச் சுகா­தார நிறு­வ­னம் 18 வய­துக்­குக் கீழா­னோ­ருக்கு இன்­னும் அவற்­றைப் பரிந்­து­ரைக்­க­வில்லை என்­ப­தைச் சுட்­டி­னார். தடுப்பு மருந்­தைத் தயா­ரித்த நிறு­வ­ன­மும் அவ்­வாறு சிங்­கப்­பூ­ரி­டம் அனு­மதி கேட்­க­வில்லை என்­ப­தை­யும் அவர் எடுத்­து­ரைத்­தார். எனவே மருத்துவ ரீதியாக 'எம்ஆர்என்ஏ' தடுப் பூசிக்குத் தகுதிபெறுவோர் அவற்றைச் போட்டுக்கொள்ளும்படி டாக்டர் ஜனில் வலியுறுத்தினார்.