தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைவருக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை

2 mins read
c0491df8-2c91-404f-8dde-eb50b9dbef7d
-

சிங்­கப்­பூ­ருக்கு வரும் அனைத்­துப் பய­ணி­களும், அடுத்த ஆண்­டி­லிருந்து தானி­யக்­கக் குடி­நு­ழைவு நடை­மு­றைக்­கான தடங்­க­ளைப் பயன்­ப­டுத்­திக்கொள்ளலாம் என்று குடி­நு­ழை­வுச் சோத­னைச் சாவடி ஆணை­யம் தெரி­வித்­துள்ளது.

தற்போ­தைய நடை­மு­றை­யின் கீழ், வெளி­நாட்­டுப் பய­ணி­கள் சிங்­கப்­பூ­ருக்கு வரும்போது, ஆணை­யத்­தின் அதி­கா­ரி­கள் பணி­யாற்­றும் முகப்­பு­க­ளுக்­குச் செல்­ல­வேண்­டும். அவர்­க­ளது விழித்­திரை, முக அடை­யா­ளங்­க­ளின் அடிப்­படை­யில் குடி­நு­ழைவு அனு­மதி வழங்­கப்­ப­டு­கிறது.

இனி அவர்­களும், சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் நீண்­ட­கால அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போ­ரும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய தானி­யக்­கத் தடங்­க­ளைப் பயன்­ப­டுத்­த­லாம். ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட அதன் வரு­டாந்­திரப் புள்­ளி­யி­யல் அறிக்­கை­யில் இந்­தத் தக­வல் இடம்­பெற்­றுள்­ளது.

சென்ற ஆண்டு அக்­டோ­ப­ரில், சாங்கி விமான நிலை­யத்­தில் மின்­வருகை அட்­டையை ஆணை­யம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

விரை­வில் அது அனைத்து சோத­னைச் சாவடி­க­ளி­லும் நடப்­புக்கு வரும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த நடை­மு­றை­யின்­கீழ், வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளின் கடப்­பி­தழ்­களில் இனி அனு­மதி முத்­திரை பதி­யப்­ப­ட­மாட்­டாது. இவை, ஆணை­யத்­தின் அதி­கா­ரி­க­ளுக்­கும், பயணி­க­ளுக்­கும் இடை­யிலான தொடர்­பைக் குறைக்­கும் நட­வ­டிக்­கை­கள் என்று ஆணை­யம் கூறி­யது.

சரக்கு விநி­யோகத்­தைப் பாது­காப்­பான முறை­யில் செயல்­ப­டுத்த, அதனை மின்­னி­லக்க மற்­றும் தானி­யக்­கப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை­யும் ஆணை­யம் எடுத்­துள்­ளது. அனைத்­து­ல­கத் துறை­மு­கம் என்ற சிங்­கப்­பூ­ரின் தர­நி­லை­யைக் கட்­டிக்­காப்­பதும் அதன் இலக்கு.

துவாஸ் துறை­மு­கத்­தில், கப்­பல் நக­ரும்­போதே சரக்கை அதி­லி­ருந்து மாற்­று­வ­தற்­கான 'ஆன்-த-ஃப்ளை' முறை சென்ற அக்­டோ­ப­ரில் நடப்­புக்கு வந்­தது. சரக்­கு­க­ளின் மின்­வரு­டிப் படங்­க­ளைக் கொண்ட ஆவ­ணங்­களை முன்­னரே சமர்ப்­பிக்­க­வேண்­டும்.

ஆணை­யத்­தின் அதி­கா­ரி­கள் அவற்­றைச் சரி­பார்த்த பின்­னர் தானி­யக்க முறை­யில் அவை அனு­மதிக்­கப்­படும்.

இரண்­டாம் கட்­டச் சோத­னைக்­கும் நட­மா­டும் தொழில்­நுட்­பக் கருவி­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

அந்த நடை­முறை நேரத்தை மிச்­சப்­ப­டுத்த உத­வு­வ­தாக ஆணை­யம் சொன்னது.