குடும்ப வருமானம் அதிகரிப்பு

குடும்ப வருமானம் அதிகரிப்பு

1 mins read
76cd58ed-ceb3-40d2-ba4a-768bf6e59386
-

சிங்­கப்­பூ­ரில் குடும்­பங்­க­ளின் சரா­சரி வரு­மா­னம் சென்ற ஆண்டு அதி­க­ரித்­துள்­ளது. கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வ­லி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் மீண்டு வரு­வ­தைச் சித்­தி­ரிக்­கும் வண்­ணம் இந்­தப் புள்ளி விவ­ரங்­கள் அமைந்­துள்­ளதாக சிங்கப்பூர் புள்ளி விவரத் துறை தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு குடும்­பங்­களின் சரா­சரி வரு­மா­னம் 10 ஆண்டு­களில் முதன்­மு­றை­யாக விழுந்­த­தாகப் புள்ளி விவ­ரத் துறை கூறியது.

2020ஆம் ஆண்டு வேலையின் மூலம் வரும் குடும்­பங்­களின் சரா­சரி வரு­மா­னம் 9,189 வெள்­ளி­யாகப் பதி­வா­னது. சென்ற ஆண்டு இந்­தத் தொகை 3.6 விழுக்­காடு அதி­க­ரித்து 9,520 வெள்­ளிக்­குக் கூடி­யது. இது, கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்தைய காலத்தில் பதிவானதைவிட அதிகம். மத்­திய சேம­நி­திச் சந்­தா­வில் போடப்­படும் தொகை­யும் ஒரு குடும்­பத்­தின் வரு­மா­னத்­தைக் கணக்­கி­டும்­போது கருத்­தில்­கொள்ளப்­படும்.

கிட்­டத்­தட்ட அனைத்­துப் பிரிவு­களி­லும் சரா­சரி குடும்ப வரு­மா­னம் அதி­க­ரித்­தது. ஆக அதி­கம் சம்­பா­திப்­போ­ரி­டையே குடும்ப வரு­மா­னம் 1.1 விழுக்­காடு குறைந்­தது.