தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிப்ரவரி 25 முதல் பாத்தாம், பிந்தான் தீவுகளுடன் கடல்வழி 'விடிஎல்' திட்டம் தொடக்கம்

1 mins read
e790e2fc-6b6f-43a7-9db6-2bfe0049a8a5
-

இந்தோனீசியாவின் பாத்தாம், பிந்தான் தீவுகளில் இருந்து வரும், முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் இனி சிங்கப்பூர் வந்ததும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

பிப்ரவரி 25ஆம் தேதியிலிருந்து அது நடப்புக்கு வரும் என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் புதன்கிழமை (பிப்ரவரி 16) அறிவித்தது.

இரு தீவுகளில் இருந்தும், தொடக்கத்தில் வாரத்திற்கு 700 பயணிகள் அனுமதிக்கப்படுவர். பிப்ரவரி 22ஆம் தேதி காலை 10 மணியில் இருந்து (சிங்கப்பூர் நேரம்) பயணிகள் அதற்கு விண்ணப்பிக்கலாம்

கடல்வழி 'விடிஎல்' பயணத்துக்கான படகுச் சேவைகளை 'பாத்தாம் ஃபாஸ்ட்', 'பிந்தான் ரிசார்ட்' படகுச் சேவை நிறுவனங்கள் இயக்கும்.