ஓமிக்ரான்: மேலும் பலருக்கு வீட்டுத் தனிமை அனுமதி மருத்துவமனைக்குச் ெசல்லவேண்டிய தேவை இல்லை

ஓமிக்ரான்: மேலும் பலருக்கு வீட்டுத் தனிமை அனுமதி மருத்துவமனைக்குச் ெசல்லவேண்டிய தேவை இல்லை

2 mins read
6cf0fcd3-ed11-4972-aedb-cccedb3f0828
பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 பணிக்குழு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தது. குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைகள் துறை இயக்குநர் கென்னத் மாக்கும் கூட்டத்தில் சிங்கப்பூரின் புதிய கொவிட்-19 விதிமுறைகளை அறிவித்தனர். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

கொவிட்-19 தொற்­றி­ய­வர்­களில் மேலும் பலரை நேற்று முதல் ஆரம்ப பரா­ம­ரிப்பு மருத்­து­வர்­களே கையாள முடி­யும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்து உள்­ளது.

குறிப்­பாக, வேறு எந்த நோய்­களும் இல்­லா­மல் இலே­சான சுவாசப் பிரச்­சி­னை­களை மட்­டும் எதிர்­நோக்­கும்பட்­சத்­தில் இந்த ஏற்­பாடு, தடுப்­பூசி நில­வ­ரம் எப்­படி இருந்­தா­லும் 3 முதல் 69 வரை வய­துள்­ள­வர்­க­ளுக்­குப் பொருந்­தும்.

முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 70 முதல் 79 வரை வய­துள்ள நோயா­ளி­க­ளுக்­கும் இது பொருந்­தும். இவர்கள் மருத்துவ மனைக்குச் செல்லவேண்டிய தேவை இல்லை.

இந்த வய­துப் பிரி­வி­னர் அல்லாத மற்ற நோயா­ளி­க­ளை வீட்­டில் இருந்து குண­ம­டை­யும் திட்­டம் அல்­லது கொவிட்-19 சிகிச்சை நிலை­யம் அல்­லது மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை மூல­மாக தொடர்ந்து சுகா­ தார அமைச்சே கையா­ளும் என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

எடுத்­துக்­காட்­டாக, முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 80 வய­தும் அதற்கு அதிக வய­தும் உள்ள முதி­ய­வர்­கள், 70 வயது முதல் 79 வயது வரைப்­பட்ட தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் வீட்­டி­லேயே குண­ம­டை­யும் செயல்­திட்­டத்­தின்­கீழ் வைக்­கப்­ப­டு­வர்.

அவர்­களுக்குத் தொலை­தூ­ர சிகிச்சை­ வழங்கப்படும்­. முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத 80 வய­தும் அதற்கு அதிக வய­தும் உள்­ள­வர்­களுக்குப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களில் சிகிச்சை அளிக்­கப்­படும்.

"ஓமிக்­ரான் தொற்­றிய நோயாளி­களின் நில­வ­ரம் பற்றி மறு­ப­ரி­சீலனை செய்து இருக்­கி­றோம். பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு இலே­சான அறி­கு­றி­தான் உள்­ளது. அல்­லது அறவே அறி­குறி இல்லை.

"அவர்­கள் சொந்­த­மா­கவே குண­ம­டைந்­து­வி­ட­லாம்," என செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் மருத்­துவச் சேவை­கள் துறை இயக்கு­நர் கென்­னத் மாக் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, ஓமிக்­ரான் தொற்று உறு­தி­யா­ன­வர்­க­ளு­டன் அணுக்­கத் தொடர்­பில் இருந்­த­வர்­களுக்கு நாளை முதல் சுகா­தார ஆபத்து எச்­ச­ரிக்கை அனுப்­பப்­படாது. அவர்­கள் தங்­க­ளைத் தாங்­களே சுய­மாக கண்­கா­ணித்­துக்­கொள்ளவேண்­டிய கால அள­வும் ஏழு நாள்­களில் இருந்து ஐந்து நாள்­க­ளாக குறைக்­கப்­படும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

ஆகை­யால், சுகா­தார ஆபத்து எச்­ச­ரிக்­கைக்­குப் பதி­லாக சுகா­தார ஆபத்து அறி­விப்பு கடி­தம் அனுப்­பப்­படும். இது ஐந்து நாள்­க­ளுக்­குச் செல்­லு­ப­டி­யா­கும்.

இதனிடையே, ஓமிக்­ரான் தொற்­றி­ய­வர்­கள் வேக­மாக குண­ம­டைந்து வரு­கி­றார்­கள் என்று நேற்று செய்தியாளர் கூட்டத்தில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறினார்.

ஓமிக்­ரா­னின் சிறப்பு இயல்­பு­களை மன­தில்கொண்டு அதற்­கேற்ப சுகா­தார நடை­மு­றை­க­ளைத் திருத்தி அமைக்க வேண்டியுள்ளது என்ற அமைச்சர், இத­னை­யொட் டியே சுகா­தார ஆபத்து எச்­ச­ரிக்­கைக்­குப் பதி­லாக சுகா­தார ஆபத்து கடி­தம் இடம்­பெ­று­கிறது என்றார்.