விளையாட்டு: பிப்ரவரி 25 முதல் 30 பேர் வரை அனுமதி

விளையாட்டு: பிப்ரவரி 25 முதல் 30 பேர் வரை அனுமதி

1 mins read
7618cbc3-4819-447d-8fe0-f8b749041fde
-

எல்லா விளை­யாட்­டு­களும் 30 பேரை உள்­ள­டக்­கும் அள­விற்கு பிப்­ர­வரி 25 முதல் அனு­ம­திக்­கப்­படும். விளை­யாட்­டு­களில் கலந்து­கொள்­வோர் முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளாக இருக்­க­வேண்­டும்.

இதை, அமைச்­சு­கள் நிலை கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு நேற்று செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தது. அனு­ம­திக்­கப்­ப­டு­வோ­ரில் விளை­யாட்­டா­ளர்­கள், பயிற்சி அளிப்­ப­வர்­கள், நடு­வர்­கள் அனை­வ­ரும் உள்­ள­டங்­கு­வர்.

விளை­யாட்டு தொடங்­கு­வதற்கு முன்­பும் முடிந்த பிற­கும் இடை­வெளி நேரத்­தின் போதும் நடப்­பில் உள்ள பாது­காப்பு நடை முறை­கள் பின்­பற்­றப்­பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விளை­யாட்­டா­ளர்­கள் முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இருப்­பார்­கள் என்­ப­தால் விளை­யாட்­டுக்கு முன்­ன­தாக கூடு­தல் பரி­சோ­தனை தேவை இல்லை.

இருந்­தா­லும் விளை­யா­டும் இடத்­திற்­குச் செல்­வோர் முன்ன தாக தங்­க­ளைத் தாங்­களே பரி­சோ­தித்துக்கொள்ள வேண்டும் என அறி­வு­றுத்­தப்­ப­டு­கிறது.