நோய்களைக் கண்டறியக்கூடிய தொழில்நுட்பங்களை வரலாறு காணாத வேகத்தில் தூண்டிவிட்ட ஒரு தளமாக கொவிட்-19 தொற்று உள்ளது என்று மருத்துவச் சேவைகள் துறை இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்தார்.
புதுப்புது பரிசோதனை கருவிகளும் ஏஆர்டி பரிசோதனையும் ஓராண்டுக்குள் உருவாக்கப்பட்டதை அவர் சுட்டினார்.
ஆசியாவில் நோய்க்குறி துறையை வேகப்படுத்துவது பற்றிய மெய்நிகர் கலந்துரையாடல் ஒன்றில் திரு மாக்கின் உரை நேற்று ஒலிபரப்பானது.
இருந்தாலும் நோய்களைக் கண்டறியும் துறையில் புதிய உன்னதத்தையும் துல்லியத்தையும் ஆற்றலையும் சாதிக்க மேலும் பலவற்றைச் செய்ய வேண்டி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

