முழுமையான தடுப்பூசித் தகுதியை இழந்த 21,800 பேர்

சிங்­கப்­பூ­ரில் கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­தால் முழு­மை­யான தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட தகு­தியை சுமார் 21,800 பேர் இழந்­து­விட்­ட­னர். அவர்­கள் 18 வய­தும் அதற்கு அதிக வய­தும் உள்­ள­வர்­கள்.

முழு­மை­யாகத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் என்­னும் தகுதியை இழந்­த­வர்­கள் உண­வகங்­களில் அமர்ந்து சாப்­பிட முடி­யாது. கடைத்­தொ­கு­தி­களுக்குச் செல்ல முடி­யாது. இதர தடைகளும் உண்டு.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நில­வ­ரப்­படி, தகு­தி­பெற்று இருந்­த­போ­தி­லும் அவர்­கள் கூடு­தல் தடுப்­பூ­சிக்­குப் பதிந்துகொள்­ள­வில்லை என்று சுகா­தார அமைச்சு கூறி­யது. இரண்­டா­வது தடுப்­பூசியைப் போட்ட பிறகு 270 நாள்களுக்­குள் கூடு­தல் தடுப்­பூசியைப் போட்­டுக் கொண்­டி­ருக்க வேண்­டும்.

இத­னி­டையே, பிப்­ர­வரி 11 முதல் 13 வரைப்­பட்ட கடந்த வார இறு­தி­யில் ஏறத்­தாழ 82,000 பேர் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தா­க­வும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இது, முந்­திய வார இறு­தி­யின் எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் குறிப்­பிடத்­தக்க அள­வுக்கு அதி­கம் என்று அமைச்சு கூறி­யது. முந்­திய வார இறு­தி­யின்­போது ஏறக்­கு­றைய 63,000 பேர் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர்.

கூடு­தல் தடுப்­பூசி போட்­ட­வர்­களின் தடுப்­பூசி தகுதிநிலை பற்றிய தக­வல்­கள் 24 மணி நேரத்­திற்­குள் பதிவு செய்­யப்­படும் என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

இதனிடையே, செவ்­வாய்க்­கிழமை நில­வ­ரப்­படி, மக்­கள்­தொகை­யில் சுமார் 94% முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டி­ருந்­த­னர். 64% கூடு­தல் தடுப்­பூசி போட்­டி­ருந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!