எளிதில் பாதிக்கப்படக்கூடியோருக்கு மட்டும் வழக்க பரிசோதனை

எளிதில் பாதிக்கப்படக்கூடியோருக்கு மட்டும் வழக்க பரிசோதனை

1 mins read
f19ff149-f4d2-4ecf-9e81-1931db3f1728
-

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, முதி­யோர் பரா­ம­ரிப்பு, பாலர்­ பள்­ளி­கள் போன்ற எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய பிரி­வி­னர் மட்­டுமே நாளை முதல் தொடர்ந்து காலக்­கி­ரம முறைப்­ப­டி­யான பரி­சோ­தனை ஏற்­பாட்டை கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

கொவிட்-19 உரு­மா­றிய கிரு­மி­யின் தனிப்­பட்ட தன்­மை­க­ளுக்கு ஏற்ப நடப்பு விதி­மு­றை­க­ளைத் திருத்தி அமைக்­கும் முயற்­சி­யின் ஒரு பகு­தி­யாக இந்த ஏற்­பாடு நடப்­புக்கு வரு­கிறது என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று பல அமைச்­சு­களை உள்­ள­டக்­கிய சிறப்­புப் பணிக்­குழு மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

உண­வ­கங்­கள், உண­வங்­காடி நிலை­யங்­கள் போன்ற உணவு, பானத் துறை­யில் வேலை பார்ப்­பவர்­கள், கடைத்­தொ­கு­தி­களில் வேலை பார்ப்­ப­வர்­கள், விமான நிலைய, துறை­முக எல்­லை­களில் வேலை பார்ப்­ப­வர்­கள் ஆகி­யோர் இப்­போது காலவரிசை முறைப்­படி கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும்.

பொது­வாக இவர்­க­ளுக்­குத் தொற்று ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்து அதி­கம் என்று கரு­தப்­ப­டு­கிறது.

இருந்­தா­லும் நாளை முதல் இத்­தகைய ஊழி­யர்­கள் காலவரிசை முறை­யி­லான பரி­சோ­தனை ஏற்­பாட்­டில் இடம்­பெற வேண்­டிய தேவை இல்லை.