2வது பூஸ்டருக்கு இப்போது திட்டம் இல்லை

2வது பூஸ்டருக்கு இப்போது திட்டம் இல்லை

2 mins read
f25ac1d7-fca6-416e-af44-f90f641a905a
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19க்கு எதிரான இரண்­டா­வது பூஸ்டர் தடுப்­பூ­சிக்­கான திட்­டம் எது­வும் இப்­போதைக்கு இல்லை என்று சுகாதார அமைச்­சின் மருத்­துவ சேவை­கள் துறை இயக்­கு­நர் கென்னத் மாக் அறி­வித்­தார்.

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­யால் ஏற்­ப­டக்­கூ­டிய பாது­காப்பு தொடர்பான ஆதா­ரங்­களை அதி­கா­ரி­கள் ஆராய்ந்துள்ளனர்.

அதோடு, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரி­டம் தொற்று எந்த அள­வுக்கு இருக்­கிறது என்­ப­தை­யும் அவர்­கள் ஆராய்ந்துள்ளனர்.

இரண்­டா­வது பூஸ்டர் தேவையா அப்­படி தேவை எனில் அது எப்­போது தேவைப்­படும் என்­பது பற்றி இப்­போது முடிவு செய்­வது சரியான தாக இருக்­காது என்று அவர் நேற்று நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

இரண்­டா­வது பூஸ்­டர் தடுப்பூசி தேவை என்ற எண்­ணம் இப்­போது இல்லை என்­றார் அவர்.

கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் (பூஸ்­டர்) போட்­டுக்­கொள்­ளும்­படி இப்­போது மேலும் பல­ருக்­கும் ஊக்­க­மூட்டி வரு­கி­றோம்.

இரண்­டா­வது பூஸ்டர் தடுப்­பூசி தேவையா என்­பது பற்றி அதற்­குள்ளாக முடிவு செய்ய முடி­யாது என அவர் கூறி­னார்.

இத­னி­டையே, இரண்­டா­வது, மூன்­றா­வது கூடு­தல் தடுப்­பூசி தேவையா என்­பது பற்றி அறி­வியல் அறி­ஞர்­கள் இன்­ன­மும் விவா­தித்து வரு­கி­றார்­கள் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்­றைய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

வருங்­கா­லத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய உரு­மா­றிய கிரு­மி­கள் ஓமிக்­ரான் போலவே இருந்­தால் அதற்­கா­கவே சிறப்­பான தடுப்­பூ­சியை உரு­வாக்க வேண்­டிய தேவை இல்­லா­மல் போக­லாம் என்­றார் அவர்.

டெல்­டாவை போன்ற கிரு­மி­கள் உரு­மாறி தலை­யெ­டுக்­கும் பட்­சத்­தில் அந்­தத் தொற்­றுக்கு எதி­ராக நம்மை பாது­காத்­துக்­கொள்ள சிறப்பு அம்­சங்­கள் வாய்ந்த தடுப்­பூ­சியை உரு­வாக்­கு­வது பற்றி பரி­சீ­லிக்க வேண்டி இருக்­க­லாம் என்­று இணைப் பேராசிரியரான கென்னத் மாக் தெரிவித்தார்.