தாதிமை விடுதியிலேயே குணமடைய அனுமதி

தாதிமை விடுதியிலேயே குணமடைய அனுமதி

1 mins read
b08e98ff-8bc0-4695-a427-adb13cafe1dd
-

முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட தாதிமை விடு­தி­வா­சி­களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்­பட்டு அறி­கு­றி­கள் வெளியே தெரியா­மல் இருந்­தால் அல்­லது இலே­சான அறி­கு­றி­கள் தெரிந்­தால் அவர்­கள் தாங்­கள் தங்கி இருக்­கும் விடு­தி­யி­லேயே தொடர்ந்து தங்­கி இருக்க அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள்.

தனிப்­பட்ட பரா­ம­ரிப்பு நிலை­யத்­திற்கு இன்று முதல் அவர்­கள் அனுப்­பப்­ப­ட­மாட்­டார்­கள்.

அத்­த­கைய விடு­தி­வா­சி­க­ளி­டம் ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­களுக்கு மருத்­து­வ­மனை சிகிச்சையோ தனிமை இட பரா­மரிப்பு சிகிச்­சையோ தேவை­யில்லை என்­பது ஆய்வு மூலம் தெரி­ய­வந்­ததை அடுத்து இந்­தப் புதிய ஏற்­பாடு நடப்­புக்கு வரு­கிறது. பல அமைச்­சு­களை உள்­ள­டக்­கிய கொவிட்-19 சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டம் நேற்று நடந்­தது.

அதில் கலந்­து­கொண்ட சிங்­கப்­பூ­ரின் மருத்­துவச் சேவை­கள் துறை இயக்­கு­நர் கென்­னத் மாக், ஓமிக்­ரான் சூழ்­நிலை டெல்­டா­வை­போல் இல்லை என்று கூறி­னார்.