நீண்டகால அனுமதிதாரர் வர அங்கீகார தேவை ரத்து

நீண்டகால அனுமதிதாரர் வர அங்கீகார தேவை ரத்து

1 mins read
44a7194b-dbd7-4869-b520-f7cbd6f27cad
-

முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட நீண்­ட­கால அனு­ம­தி­தாரர்­கள் பெற வேண்­டிய நுழைவு அங்­கீ­கார தேவை ஏற்பாடு பிப்­ரவரி 21 முதல் அகற்­றப்­படும்.

இருந்­தா­லும் இதில் வேலை அனு­ம­தி­சீட்டு ஊழி­யர்­கள் (ஒர்க்­பர்­மிட்) சேர்க்­கப்­ப­ட­மாட்­டார்­கள்.

அதா­வது, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணப்­பாதைத் திட்­டத்­தின் வழி சிங்­கப்­பூ­ருக்கு வரு­கின்ற நீண்­ட­கால அனு­ம­தி­தா­ரர்­கள், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பயண அனு­ம­திக்கு விண்­ணப்­பிக்க வேண்­டிய தேவை இராது.

அந்­தப் பாதை­யில் வரா­த­வர்­கள் நுழைவு அனு­ம­திக்கு மனு­செய்ய வேண்­டாம்.

இருந்­தா­லும் இத்­த­கைய பய­ணி­கள் நடப்­பில் இருக்­கும் குடி­நு­ழைவு நிபந்­த­னை­க­ளை­யும் சுகா­தார நடை­மு­றை­க­ளை­யும் நிறை­வேற்ற வேண்டி இருக்­கும்.

எம்­பி­ளாய்­மெண்ட் பாஸ், எஸ் பாஸ், சார்ந்­தி­ருப்­போர் அனு­மதி போன்ற நீண்­ட­கால அனு­ம­தி­தாரர்­க­ளுக்கு உரிய இந்­தப் புதிய நடை­மு­றை­கள் பிப்­ர­வரி 21 இரவு 11.59 மணி முதல் நடப்­புக்கு வரும்.