19 மாத தொடர் ஏற்றம்

19 மாத தொடர் ஏற்றம்

2 mins read
0e91720e-b715-48cf-a39e-4a0a3642f3d0
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) வீடு­க­ளுக்­கும் தனி­யார் வீடு­க­ளுக்­கு­மான வாடகை கடந்த மாத­மும் அதி­க­ரித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. சிங்­கப்­பூ­ரின் ஊழி­யர் சந்தை மேம்­பட்­டுள்­ள­தும் எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளைச் சிங்­கப்­பூர் தளர்த்தி வரு­வ­தும் இந்த அதி கரிப்புக்கு முக்­கிய கார­ணம் என்று தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

வெளி­நாட்­டி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரு­வோ­ரின் எண்­ணிக்கை கணி­ச­மாக உயர்ந்­தி­ருப்­ப­தால் வாடகை வீடு­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ள­தாக சொத்­துச் சந்தை நிபு­ணர்­கள் கூறி­னர்.

கூட்­டு­ரிமை வீடு­க­ளின் வாடகை கடந்த மாதம் 1.6 விழுக்­காடு அதி­க­ரித்­தது என்று சொத்­துச் சந்தை நிறு­வ­னங்­க­ளின் புள்ளி­ வி­வ­ரங்­கள் கூறின. அதே­போல வீவக வீடு­க­ளின் வாடகை சென்ற ஆண்டு டிசம்­ப­ரைக் காட்­டி­லும் ஜன­வ­ரி­யில் 1.2 விழுக்­காடு அதி­க­ரித்­தது.

சொத்­துச் சந்தை நிறு­வ­னங்­

க­ளான '99.கோ', 'எஸ்­ஆர்­எக்ஸ்' ஆகி­யவை புதன்­கி­ழமை (பிப்­ர­வரி 16) அன்று வெளி­யிட்ட முன்­னோட்ட மதிப்­பீட்­டுத் தக­வல்­கள் இதைத் தெரி­வித்­தன.

வீவக வீடு­க­ளின் வாடகை 19 மாதங்­க­ளா­கத் தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளதாக மதிப்­பீ­டு­கள் காட்­டின. முதிர்ச்சியடைந்த குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் வீவக வீட்டு வாடகை கடந்த மாதம் 2.9 விழுக்­காடு அதி­க­ரித்­தது. அதே­நே­ரம், முதிர்ச்சி அடை­யாத குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் வாடகை 0.5 விழுக்­காடு குறைந்­தது.

அங் மோ கியோ, பிடோக், பீஷான், புக்­கிட் மேரா, புக்­கிட் தீமா, கிள­மெண்டி, கேலாங், காலாங், மரீன் பரேட், பாசிர் ரிஸ், குவீன்ஸ்­

ட­வுன், சிராங்­கூன், தெம்­ப­னிஸ், தோ பாயோ ஆகி­யன முதிர்ச்சி அடைந்த குடி­யி­ருப்­புப் பேட்­டை­கள்.

புக்­கிட் பாத்­தோக், புக்­கிட் பாஞ்­சாங், சுவா சூ காங், ஹவ்­காங், ஜூரோங் வெஸ்ட், பொங்­கோல், செம்­ப­வாங், செங்­காங், தெங்கா, போன்­றவை முதிர்ச்சி அடை­யாத குடி­யி­ருப்­புப் பேட்­டை­கள்.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யி­லான கூட்­டு­ரிமை வீடு­க­ளின் வாடகை 2021 ஜன­வ­ரி­யைக் காட்­டி­லும் இந்த ஜன­வ­ரி­யில் 11.2 விழுக்­காடு கூடி­யது.

கூட்­டு­ரிமை வீடு­களில் வாட கைக்கு விடப்­பட்ட வீடு­க­ளின் எண்­ணிக்கை, டிசம்­பர் மாதத்­தைக் காட்­டி­லும் ஜனவரியில் 3.9 விழுக்­காடு அதி­க­ரித்­தது. டிசம்­ப­ரில் 4,472 கூட்­டு­ரிமை வீடு­கள் வாட­கைக்கு விடப்­பட்ட நிலை­யில் கடந்த மாதம் அந்த எண்­ணிக்கை 4,646 ஆக உயர்ந்­தது.

தேவை கூடுவதால் வீவக வீடுகளின் வாடகை 1.2% அதிகரிப்பு