ஆசிய பசிபிக் கடல்துறை கண்காட்சி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் ஆகப்பெரிய வர்த்தகக் காட்சியான 'ஆசிய பசிபிக் மரிடைம்' மரினா பே சேண்ட்ஸில் மார்ச் 16 முதல் மார்ச் 18 வரை மூன்று நாட்கள் நடைபெறும்.
கொவிட்-19 தொற்றுப் பரவலுக்குப் பின்னர் பெரிய அளவில் நேரடியாக நடைபெற இருக்கும் கண்காட்சியில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து 7,000க்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகையாளர்கள் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருப்பதோடு ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்னர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். அவர்களுக்கானப் பரிசோதனை இலவசமாகச் செய்யப்படும்.
இந்த ஆண்டில் இங்கு நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட இரண்டு அனைத்துலகக் கண்காட்சிகளில் ஒன்று இந்தக் கடல்துறை கண்காட்சி. மற்றொன்று, தற்போது சாங்கி கண்காட்சி மையத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் வான்வெளிக் கண்காட்சி.
தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த வர்த்தகர்களுடன் அனைத்துலக கடல்துறை பொருள் விற்பனையாளர்களை இணைக்கும் நிகழ்வாக கடல்துறை கண்காட்சி அமையும்.
இதற்கு முன்னர், கொவிட்-19 தொற்று கண்டறியப்படாத 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் கிட்டத்தட்ட 14,000 பேர் நேரடியாகப் பங்கேற்றனர். 60 நாடு
களைச் சேர்ந்த 1,432 காட்சிக்
கூடங்கள் இடம்பெற்றிருந்தன. இவ்வாண்டு 20 நாடுகளைச் சேர்ந்த 250 காட்சிக்கூடங்கள் மட்டுமே இடம்பெற உள்ளன.

