அதிக புதிய பட்டதாரிகளுக்கு முழுநேர வேலை கிடைத்தது

கொவிட்-19 சூழ­லி­லி­ருந்து சிங்­கப்­பூரின் பொரு­ளி­யல் மீண்டு வந்­த­தைத் தொடர்ந்து சென்ற ஆண்டு கூடு­த­லான புதிய பல்­க­லைக்கழ­கப் பட்­ட­தா­ரி­க­ளுக்கு முழு­நேர வேலை கிடைத்­துள்­ளது.

புதிய பட்­ட­தா­ரி­க­ளுக்­காக நடத்­தப்­பட்ட கருத்­தாய்­வில் 84 விழுக்­காடு புதிய பட்­ட­தா­ரி­க­ளுக்கு வேலை கிடைத்­தது தெரி­ய­வந்­தது. 2020ஆம் ஆண்டு இந்த விகி­தம் 69.8 விழுக்காடாகப் பதி­வா­னது.

மேலும், சென்ற ஆண்டு பல்­கலைக்­க­ழ­கப் பட்­டக் கல்­வியை முடித்த மாண­வர்­க­ளுக்கு வழங்கப்­படும் சம்­ப­ள­மும் அதி­க­ரித்­த­தாக நேற்று வெளி­யி­டப்­பட்ட கருத்­தாய்­வின் முடி­வு­கள் தெரி­வித்­தன.

சரா­ச­ரி­யாக முழுநேர வேலை­யில் இருக்­கும் ஒரு பட்­ட­தா­ரி­யின் சம்­ப­ளம் சென்ற ஆண்டு 3,800 வெள்­ளி­யா­க இருந்தது. 2020ஆம் ஆண்டு ஒரு பட்­ட­தா­ரி­யின் சரா­சரி சம்­ப­ளம் 3,700 வெள்ளி. 2019ஆம் ஆண்டு இது 3,600 வெள்ளி­யாக இருந்­தது.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பட்­டக் கல்­வியை முடித்து ஆறு மாதங்­களுக்­குள் 94.4 விழுக்­காட்டு மாண­வர்­கள் முழு­நேர, பகு­தி­நேர அல்­லது தன்­னு­ரிமை வேலை­களில் சேர்ந்­து­கொண்­ட­னர். 2020ஆம் ஆண்டு இந்த விகி­தம் 93.6 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக் கழ­கம், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றில் முழு­நே­ரப் பட்­டக் கல்­வியை மேற்­கொண்ட 11,200 புதிய பட்­ட­தா­ரி­க­ளிடம் கருத்­தாய்வு நடத்­தப்­பட்­டது. சென்ற ஆண்டு நவம்­பர் மாதம் ஒன்­றாம் தேதி நில­வ­ரப்­படி அவர்­க­ளின் வேலை குறித்த விவ­ரங்­கள் கேட்­டறி­யப்­பட்­டன.

சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கம், சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப, வடி­வமைப்புப் பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றுக்­கான கருத்­தாய்­வு­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. இவற்­றின் முடி­வு­கள் பின்­னர் வெளி­யி­டப்­படும்.

சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் சென்ற ஆண்டு 7.2 விழுக்­காடு வளர்ச்சி கண்­டது. 2020ஆம் ஆண்­டில் பொரு­ளி­யல் 5.4 விழுக்­காடு சுருங்­கி­யது.

2020ஆம் ஆண்டு பல்­கல்­கலைக்­க­ழகப் பட்­ட­தா­ரி­க­ளி­டையே வேலை­யின்மை விகி­தம் 6.4 விழுக்­கா­டாக இருந்­தது. சென்ற ஆண்டு இந்த விகி­தம் 5.6 விழுக்­காட்­டுக்­குக் குறைந்­தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!