மோசடிகளைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள்

மோசடிகளைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள்

2 mins read
10b15f31-7ecd-433b-8571-cd951c152ca6
மூத்த விசாரணை அதிகாரி குவெக் கீ பூன் (இடது) உட்படமோசடிகளைத் தவிர்க்கும் முயற்சிகளை எடுத்துவரும் அதிகாரிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மோச­டிக்கு ஆளான 50 வய­தை­த் தாண்டிய ஒரு மாது தனது தொலை­பேசி அழைப்­பு­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கா­த­தால் மூத்த விசா­ரணை அதி­கா­ரி­யான குவெக் கீ பூன் கடந்த மாதம் அவ­ரின் வீட்­டிற்­குச் சென்­றி­ருக்­கி­றார். வீட்­டி­லி­ருந்து வரும் எரி­வா­யு­வின் வாசத்தை அவ­ரால் உணரமுடிந்­தது.

வீட்­டில் அந்த மாது எரி­வா­யுவை அள­வுக்­க­தி­க­மாக நுகர்ந்து செய­லி­ழந்த நிலை­யில் கிடந்­தார். வீட்­டின் கத­வைக்­கூட திறக்க முடி­யா­த­தால் அவர் மரக்­கட்­டை­யால் செய்­யப்­பட்ட கோலைக் கொண்டு திறந்தார்.

ஏமாற்­றுக்­கா­ரர்­க­ளி­டம் வாழ்க்­கைத் தேவை­க­ளுக்­கா­கத் தான் சேமித்­தி­ருந்த 100,000 வெள்­ளியை இழந்­த­தால் தனது உயிரை மாய்க்க முயன்­ற­தாக அந்த மாது தெரி­வித்­தார்.

மோச­டி­க­ளைத் தடுக்க காவல்­து­றை­யி­னர் எடுக்­கும் முயற்­சி­களை எடுத்­துச்சொல்ல மூத்த விசா­ரணை அதி­காரி குவெக் இச்­சம்­ப­வத்தை விவ­ரித்­தார். செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அவர் பேசி­னார்.

திரு குவெக், வர்த்தக விவகாரப் பிரிவின்கீழ் உள்ள மோசடி தடுப்புப் பிரிவைச் சேர்ந்தவர். மோசடிகளைத் தடுக்கக் காவல்துறை எடுக்கும் முயற்சிகளை இப்பிரிவு கவனித்து வருகிறது.

சில வேளை­களில் மோச­டி­களுக்கு ஆளா­வோர் உயிரை மாய்த்­துக்­கொள்ள முயற்சி செய்­வ­தும் உண்டு என்­பது வலி­யு­றுத்­தப்­படுகிறது.

சென்ற ஆண்டு செப்­டம்­பர், நவம்­பர் மாதங்­க­ளுக்கு இடைப்­பட்ட காலத்­தில் தீவு முழு­வ­தும் மூன்று மோசடி தடுப்பு சோத­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இவற்­றில் மட்­டுமே 135 தனி­ந­பர்­கள் கைது­செய்யப்­பட்­ட­னர்.

தொலைத்­தொ­டர்பு நிறு­வ­னங்­கள், மின்­வர்த்­தக நிறு­வ­னங்­கள் உள்­ளிட்­ட­வற்­று­டன் இணைந்து செயல்­பட்­டும் ஏமாற்­றுக்­கா­ரர்­களைப் பிடிக்­கும் முயற்­சி­க­ளைக் காவல்­துறை எடுத்து வரு­கிறது.

சென்ற ஆண்டு 12,600க்கும் அதி­க­மான வங்­கிக் கணக்­கு­களை முடக்கி மோச­டி­க­ளுக்­குப் பறி­போன 102 மில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகையை காவல்­துறை மீட்­டெ­டுத்­தது.