மோசடிகளைத் தடுப்பதற்கான மாறுபட்ட நடவடிக்கைகள்

மோசடிகளைத் தடுப்பதற்கான மாறுபட்ட நடவடிக்கைகள்

2 mins read
3a67afbc-86c0-42dc-8767-e99ea625b1ab
-

காவல்­து­றை­யும் தேசி­யக் குற்­றத் தடுப்பு மன்­ற­மும் இணைந்து மோச­டிச் சம்­ப­வங்­க­ளுக்கு எதி­ரான விழிப்­பு­ணர்­வைத் தூண்­டும் இசைக் காணொ­ளியை வெளி­யிட்­டுள்­ளன. காவல்­து­றை­யின் பல்­வேறு முயற்­சி­களில் இது­வும் ஒன்று.

20 முதல் 39 வய­தா­ன­வர்­கள், மின்­வ­ழிப்­பறி, வேலை, மின்வர்த்­த­கம், முத­லீடு, கடன் ஆகி­யவை தொடர்­பான மோச­டி­கள், சீன அதி­கா­ரி­யைப் போன்ற ஆள்­மா­றாட்­டம், போலி­யான சூதாட்­டத் தளம் எனப் பல்­வேறு மோச­டி­க­ளுக்கு ஆளா­வதாக நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் மோசடி நில­வ­ரம் குறித்த கேள்­விக்­குப் பதி­ல­ளித்­துப் பேசிய உள்­து­றைத் துணை­ய­மைச்­சர் டெஸ்­மண்ட் டான் இத­னைத் தெரி­வித்­தார். இசைக் காணொளி மட்­டு­மின்றி, காவல்­துறை வேறு சில மோச­டித் தடுப்­புத் திட்­டங்­களை­யும் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ளது.

சென்ற ஆண்டு டிசம்­பர் 3ஆம் தேதி தொடங்­கிய விழிப்­பு­ணர்­வுத் திட்­டத்­தின் கீழ், முத­லீட்டு மோசடி­களில் எளி­தில் ஏமா­றக்­கூ­டி­யோரை அடை­யா­ளம்­ கண்டு காவல்­துறை எச்­ச­ரிக்கை அனுப்­பு­கிறது.

விதி­மு­றை­க­ளுக்கு உட்­ப­டாத முத­லீட்டு விளம்­ப­ரங்­க­ளைச் செய்­வதா­கச் சந்­தே­கிக்­கப்­படும் 'வாட்ஸ்­அப்' குழுக்­க­ளின் படங்­களை அதி­கா­ரி­கள் ஊழல் எதிர்ப்பு நிலை­யத்­தி­டம் சமர்ப்பிப்பர். அதில் காணப்­படும் உள்­ளூர்த் தொலை­பேசி எண்­க­ளுக்­குத் தானி­யக்க முறை­யில் ஆலோ­ச­னை­கள் அனுப்­பப்­படும்.

சென்ற டிசம்­பர் இறு­திக்­குள் 1,300க்கும் மேலா­னோர் அத்­த­கைய ஆலோ­ச­னை­க­ளைப் பெற்­றுக்­கொண்­ட­னர்.

கவ்­டெக், தேசி­யக் குற்­றத் தடுப்பு மன்­றம் ஆகி­யவை உரு­வாக்­கிய ஸ்கேம்­ஷீல்டு செயலி 2020இல் அறி­மு­க­மா­னது.

செயற்கை நுண்­ண­றி­வைப் பயன்­ப­டுத்தி மோச­டிக் குறுந்­த­கவல்­களை அடை­யா­ளம் கண்டு தவிர்க்­க­வும், பாதிக்­கப்­பட்­டோர் புகா­ர­ளித்த மோச­டித் தொலை­பேசி எண்­ணி­லி­ருந்து வரும் அழைப்பை நிரா­க­ரிக்­க­வும் இது உத­வு­கிறது.

இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளின் வாயி­லா­க­வும் காவல்­து­றை­யி­னர் மோச­டி­க­ளைத் தடுக்­கும் முயற்­சி­களை எடுத்து வரு­கின்­ற­னர்.