முழுமைத் தற்காப்பின் தேவையைத் தொடர்ந்து உணர்த்த முயற்சி

முழுமைத் தற்காப்பின் தேவையைத் தொடர்ந்து உணர்த்த முயற்சி

1 mins read
ea02ce84-486a-4b0c-aab1-0837bc17ffba
இரண்டாம் உலகப் போரில் சிங்கப்பூர் ஜப்பானியர்களின் பிடியில் சிக்கியதை எடுத்துச்சொல்லும் கண்காட்சியில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இரண்­டாம் உல­கப் போர் முடிந்து பல ஆண்­டு­கள் ஆகி­விட்ட நிலை­யில் வருங்­கா­லத்­தில் அதன் தொடர்­பி­லான நினை­வு­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளக்­கூ­டி­யோ­ரின் எண்­ணிக்­கை­யும் குறைந்து வரு­கிறது. அத­னால் வருங்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ருக்கு முழு­மைத் தற்­காப்­பின் முக்­கி­யத்­து­வத்தை எடுத்­துச்­சொல்­லும் முறையை மாற்­ற­வேண்­டும் என்று தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் கூறி­யுள்­ளார்.

தேசிய அரும்­பொ­ரு­ள­கத்­தில் அமைந்­துள்ள 'டிஸ்­லொக்­கே­ஷன்ஸ்: மெமரி அண்ட் மீனிங் ஆஃப் தி ஃபால் ஆஃப் சிங்­கப்­பூர், 1942' எனும் இரண்டாம் உலகப் போரில் சிங்­கப்­பூ­ர் சம்பந்தப்பட்ட நிகழ்­வு­களைச் சித்­தி­ரிக்­கும் கண்­காட்­சிக்­குச் சென்­ற­போது டாக்­டர் இங் பேசி­னார்.

1942ஆம் ஆண்டு இரண்­டாம் பிப்­ர­வரி மாதம் 15ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூர் ஜப்­பா­னி­யர்­க­ளின் பிடிக்­குச் சென்­றது. இந்­நி­கழ்­வின் 80ஆம் ஆண்டு நிறைவை அனு­ச­ரிக்க இந்­தக் கண்­காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்­டு­தோ­றும் பிப்­ர­வரி 15ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூ­ர் முழு­மைத் தற்­காப்பு தினத்தை அனு­ச­ரித்து வருகிறது.

தேசத்­தின் பாது­காப்பை உறுதிப்படுத்த சமூ­கத்­தின் எல்லா பிரி­வி­ன­ரும் பங்­காற்­ற­வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­து­வது இதன் இலக்கு.

20 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு 2042ஆம் ஆண்டு, சிங்­கப்­பூர் ஜப்­பா­னி­யர்­க­ளின் பிடிக்­குச் சென்ற 100வது ஆண்டு நினை­வு­கூ­ரப்­படும். அப்­போது ஆதிக்­கத்தை அனு­பவித்த எவ­ருமே இல்­லா­மல் போய்­வி­ட­லாம். ஜப்­பா­னி­யர் ஆதிக்­கத்தை அனு­ப­வித்த எவ­ருமே இல்­லாது போய்­வி­ட­லாம்.

நினை­வு­கூ­ர­லில் அவர்­க­ளால் பங்­கேற்க முடி­யாது என்­பது இந்தக் கண்­காட்­சி­யின்­ இறுதி அங்­கத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.