சிங்கப்பூரில் இயங்கும் 'சில்வேன்' குழுமம், சிங்கப்பூரின் நான்கு சுகாதாரப் பராமரிப்பு, மருந்து நிறுவனங்களில் பெரும் பங்குகளை 140.5 மில்லியன் வெள்ளிக்கு வாங்கியுள்ளது. தென்கொரியாவின் 'ஹியூண்டாய்' நிறுவனம், அமெரிக்காவின் 'ராக்கஃபெல்லர்' நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளர்களின் குடும்பத்தாருடைய ஆதரவுடன் 'சில்வேன்' குழுமம் இயங்கி வருகிறது.
'சில்வேன்' குழுமத்தின் துணை நிறுவனர், 'ஹியூண்டாய்' நிறுவனத்தை உருவாக்கியவரின் பேரனுமான திரு சுங் கியுங்சுன்.
புற்றுநோய் சிகிச்சை முறைகளை உருவாக்கும் 'ஜனிப்பர் பயோலாஜிக்ஸ்', எலும்புகள், தசைகள் தொடர்பிலான சேவைகளை வழங்கும் 'அர்டெமிஸ் ஹெல்த் வெஞ்சர்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்களை 'சில்வேன்' வாங்கியுள்ளது.

