தேவைக்கு ஏற்ப கட்டித்தரப்படும் (பிடிஓ) வீடுகள் திட்டத்தின்கீழ் 3,953 வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான முதல் விற்பனை நடவடிக்கையில் நான்கு வட்டாரங்களில் அமைந்துள்ள வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.
இவற்றில் 398 வீடுகள் காலாங்/வாம்போ வட்டாரத்தில கட்டப்படும் எனக் கூறப்பட்டது.
முக்கிய வட்டாரங்களில் அமையவிருக்கும் வீடமைப்புத் திட்டத்தின்கீழ் இரண்டாவது திட்டமாக இந்த வட்டாரத்தில் வீடுகள் கட்டப்படுகின்றன.
இந்தத் திட்டத்தில் மூவறை மற்றும் நான்கறை வீடுகள் கட்டப்படும்.
2027ஆம் ஆண்டு இறுதிக்குள் இத்திட்டம் நிறைவடையும் என கழகம் தெரிவித்தது.
முக்கிய வட்டாரங்களில் அமையவிருக்கும் வீடமைப்புத் திட்டத்தின்கீழ் முதல் திட்டமாக சென்றாண்டு ரோச்சோர் வட்டாரத்தில் வீடுகள் விற்பனைக்கு வந்தன.


