சிங்கப்பூரின் பொருளியல் 2021ஆம் 7.6 விழுக்காடு வளர்ச்சி

சிங்கப்பூரின் பொருளியல் 2021ஆம் 7.6 விழுக்காடு வளர்ச்சி

1 mins read
67599a7d-7fb2-4820-8121-b9dbba27a912
இந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மூன்றிலிருந்து ஐந்து  விழுக்காடு முன்னுரைப்பு -

சிங்கப்பூரின் பொருளியல் சென்றாண்டு 7.6 வளர்ச்சி அடைந்ததாக வர்த்­தக, தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த விகிதம் 7.2 விழுக்காடு இருக்கும் என முன்னுரைக்கப்பட்டது.

அதோடு, 2022ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மூன்றிலிருந்து ஐந்து விழுக்காடு வரை இருக்கும் என அமைச்சு முன்­னு­ரைத்­துள்­ளது.

சிங்கப்பூரின் பொருளியல் தொடர்ந்து விரிவடையும் என்றும், உற்பத்தி, மொத்த வர்த்தகம் ஆகிய துறைகள் தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று அமைச்சு கூறியது.