நிதி அமைச்சு: நீண்டகால பாதிப்பு தவிர்க்கப்பட்டது

நிதி அமைச்சு: நீண்டகால பாதிப்பு தவிர்க்கப்பட்டது

1 mins read
59d2d65c-3d54-4524-8474-78d973260aac
-

கொவிட்-19 தொடர்­பில் 2020ஆம் ஆண்டு, சென்ற ஆண்டு வர­வு­செ­ல­வுத் திட்­டங்­களில் அறி­விக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளின் மூலம் கூடு­தல் சிங்­கப்­பூர் வாசி­க­ளுக்­குத் தொடர்ந்து வேலை கிடைப்­பதை உறு­தி­செய்­ய­வும் பொரு­ளி­ய­லுக்கு அதிக பாதிப்பு ஏற்­ப­டா­மல் பார்த்துக்­கொள்­ள­வும் சிங்கப்பூரால் முடிந்­தது என்று நிதி அமைச்சு ஆய்வு அறிக்கையின் வாயிலாகத் தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூர் வழங்­கிய ஆத­ர­வுத் திட்­டங்­கள் கொள்­ளை­நோய்ப் பர­வல் நீண்­ட­கா­லத்துக்கு ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய பாதிப்­பு­க­ளைக் குறைக்க உத­வின. பொரு­ளி­யல், மனி­த­வள மூல­த­னம் ஆகிய அம்­சங்­களில் ஏற்படக்கூடிய பாதிப்­பு­கள் அவற்­றில் அடங்­கும்.

முக்­கி­ய­மான கொவிட்-19 ஆத­ர­வுத் திட்­டங்­கள் ஆரா­யப்­பட்­டன. இந்த முதற்கட்ட ஆய்வு முடிவுகள், வரவுசெலவுத் திட்டங்களில் அறிவிக்கப்பட்ட கொவிட்-19 நடவடிக்கைகளின் தாக்கத்தை அலசும் நிதி அமைச்சின் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டன.

சென்ற ஆண்டு பிப்­ர­வரி மாதம் இைடக்கால அறிக்கை ஒன்று வெளி­யி­டப்­பட்­டது. இப்­போது வெளி­யிடப்­பட்­டுள்ள அறிக்கை மேல்­வி­வ­ரங்­களை வழங்­கு­கிறது.

நிறு­வ­னங்­க­ளுக்­கும் அர­சாங்­கத்­துக்­கும் இருக்­கும் கட­னும் அவ்­வ­ள­வாக அதி­க­ரிக்­க­வில்லை என்­ப­தும் வர­வு­செ­ல­வுத் திட்­டங்­களின் முக்­கிய நட­வ­டிக்­கை­களை ஆராய்ந்த முதற்­கட்ட ஆய்­வின் முடி­வு­கள் தெரி­வித்­தன. உயர்­கல்வி நிலை­யங்­களில் பயின்ற புதிய பட்­ட­தா­ரி­க­ளின் வேலை வாய்ப்­பு­க­ளுக்கு அதிக பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை என்­பதும் தெரி­ய­வந்­தது.

நெருக்­கடி காலத்­தில் வேலை­யின்மை விகி­தம் கூடு­வ­து­டன் அது தொடர்ந்து அதி­க­மாக இருப்­ப­தற்­கான சாத்­தி­யம் இருப்­பதையும் நிதி அமைச்­சின் ஆய்வு அறிக்கை தெரி­வித்­தது. இத­னால் வேலை தேடு­வோர் மனந்­த­ளர்ந்து ஊழி­ய­ர­ணி­யி­லி­ருந்து வெளி­யேறக்கூடும் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டது.

அத்­த­கைய சூழலை சிங்­கப்­பூர் இது­வரை தவிர்த்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.