'வேலை இழப்பு சரிந்தது, பொருளியல் பாதிப்பு குறைந்தது'

'வேலை இழப்பு சரிந்தது, பொருளியல் பாதிப்பு குறைந்தது'

1 mins read
8366df1d-5e95-4722-9acc-a2044b7163bb
-

கொவிட்-19 சூழ­லால் ஏற்­ப­டக்­கூடிய பாதிப்­பைத் தளர்த்த கடந்த ஈராண்­டு­களில் எட்டு வர­வு­செ­ல­வுத் திட்­டங்­கள் அறி­விக்­கப்­பட்­டன. அவை சிங்­கப்­பூ­ரின் வளர்ச்­சிக்­குப் பெரிய அள­வில் கைகொ­டுத்­த­து­டன் சிங்­கப்­பூர் வாசி­க­ளி­டை­யிலான வேலை­யின்மை விகி­தத்­தைக் குறைத்­தன.

சென்ற ஆண்டு சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் 7.6 விழுக்­காடு வளர்ச்­சி­ய­டைந்­த­தும் நிதி அமைச்­சின் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது. ஆத­ர­வுத் திட்­டங்­கள் இல்­லா­மல் இருந்­தி­ருந்­தால் பொரு­ளி­யல் வளர்ச்சி 6.8 விழுக்­கா­டாக இருந்­தி­ருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டது.

மேலும், 2020ஆம் ஆண்டு சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி 4.1 விழுக்­காடு குறைந்­தது. ஆத­ர­வுத் திட்­டங்­கள் இல்­லா­திருந்தால் விகிதம் 10.7 விழுக்­காடு சரிந்­தி­ருக்­கும் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டது.

சிங்­கப்­பூர் வாசி­க­ளைி­டையே வேலை­யின்மை விகி­தம் 2020ஆம் ஆண்டு 6.1 விழுக்­கா­டாகவும் சென்ற ஆண்டு 7.5 விழுக்­கா­டா­கப் பதி­வா­கி­யி­ருக்­கலாம் என்­றும் நிதி அமைச்சு கணித்­தது.

ஆனால், 2020ஆம் ஆண்டு வேலை­யின்மை விகி­தம் 4.1 விழுக்­கா­டா­கப் பாதி­வா­னது. சென்ற ஆண்டு இந்த விகி­தம் 3.5 விழுக்­கா­டாக இருந்­தது.