சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் முக்கிய புள்ளி பதவி விலகுகிறார்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் முக்கிய புள்ளி பதவி விலகுகிறார்

2 mins read
f4aefbcb-b093-4d58-bc25-098cfdb63625
குமரன் பிள்ளை அரசியலில் இருந்து விலகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோப்புப்படம்: சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி. -

சிங்­கப்­பூ­ரின் எதிர்க்­கட்­சி­களில் ஒன்­றான சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யின் முக்­கிய புள்ளி ஒருவர் கட்­சிப் பொறுப்பிலிருந்து வில­கி­உள்­ளார்.

கடந்த தேர்­த­லில் போட்­டியிட்ட அக்­கட்­சி­யின் ெபாதுத் தொடர்­பு பிரி­வின் தலை­வ­ரான அவர், கட்­சி யில் இ­ருந்து வெளியேறுவார் என­வும் கூறப்­ப­டு­கிறது.

மக்­கள் செயல் கட்­சி­யின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டான் செங் போக்­கால் மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு தொடங்­கப்­பட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியிலிருந்து முக்கிய புள்ளி ஒருவர், பதவி விலகுவது இது இரண்­டா­வது முறை­யா­கும்.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸி­டம் பேசிய 51 வயது கும­ரன் பிள்ளை, தான் பொதுத் தொடர்பு தலை­வர் மற்­றும் பேச்­சா­ளர் பொறுப்­பி­லி­ருந்து வில­கும் முடிவை கட்­சித் தலை­வர் ஃபிரான்­சிஸ் யுவென்­னி­டம் தெரி­வித்து விட்­ட­தா­கக் கூறி­னார்.

திரு பிள்ளை, 2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்­த­லில் கெபுன் பாரு தனித் தொகு­தி­யில் போட்­டி­யிட்­ட­வர். மத்­திய நிர்­வா­கக் குழு­வி­லி­ருந்­தும் வில­கு­வது குறித்தும் கட்சித் தலைமையிடம் அவர் பேசி வரு­கி­றார். குறிப்­பி­டப்படாத காலம் வரை விடு­மு­றை­யில் செல்­ல­ அவர் அனுமதி ேகட்டுள்ளார்.

திரு யுெவன்னை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போது, மத்­திய நிர்­வா­கக் குழு­வில் அவர் தொடர்ந்து நீடிப்­பார் என்று கூறி­னார்.

திரு பிள்­ளை­யின் கட்சி உறுப்­பி­னர் பதவி கடந்த ஜன­வ­ரி­யில் கால­வ­தி­யா­னது. பத்து வெள்ளி கட்­ட­ணம் செலுத்தி அதனை அவர் புதுப்­பிக்க வேண்­டும். அதற்கு அவ­ருக்கு ஆறு மாத காலம் அவ­கா­சம் உள்­ளது.

புதிய நிறு­வ­னங்­களை நிர்­வ­கிக்கவும் மேம்­ப­டுத்­த­வும் திரு பிள்ளை ஆலோ­சனை நிறு­வ­னம் ஒன்றை நடத்தி வரு­கி­றார்.

கட்­சித் தலை­வ­ரான டாக்­டர் டானை இன்று சந்­தித்து அடுத்த கட்ட நட­வ­டிக்கை குறித்து திரு பிள்ளை முடிவு செய்­ய­வி­ருப் பதா­க­வும் தக­வல்­கள் தெரி­விக் கின்­றன. கடந்த அக்­டோ­ப­ரில் பொரு­ளா­ளர் கேய்லா லோ பதவி வில­கி­னார். இதற்கு முன்பு கடந்த தேர்­த­லில் போட்­டி­யிட்ட பிராட் போவ்­யெர் பதவி வில­கி­யுள்­ளார்.