பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 74 வயது முதியவர் தவறி விழுந்து இறப்பதற்கு சாய்வுப் பாதை என்று எண்ணி அவர் ஏறியிருக்கலாம் என்று மரண விசாரணையில் தெரிய வருகிறது.
மனிதவள அமைச்சின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரப் பிரிவின் அதிகாரி ஒருவர் நேற்று திரு டான் பிங் லிம் மரணம் குறித்த விசாரரணையின் முதல் நாளில் சாட்சியம் அளித்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி தெம்பனிசில் உள்ள செஞ்சுரி ஸ்குவேர் மால் கடைத் ெதாகுதியில் பொருள்களை ஏற்றும் பகுதியில் தள்ளுவண்டியை திரு டான் பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு மீட்டர் உயர மேட்டிலிருந்து கீழே விழுந்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு பலத்த தலைக் காயம் காரணமாக மரண மடைந்தார். மனிதவள அமைச்சின் மூத்த விசாரணை அதிகாரி யான அப்துல் ரஹ்மான் முஹமட் யாத்திம், டான் வேலை செய்த நிறுவனமான ஏஎஸ்டி லாஜிஸ்டிக்ஸ் அந்த இடத்தின் ஆபத்து குறித்து மதிப்பிடவில்லை என்றார். ஆபத்து மற்றும் பாதுகாப்பு குறித்து மரண மடைந்தவருக்கு தெளிவாக விளக்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
திரு டான், ஏஎஸ்டி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நான்கு நாட்களில் விபத்தில் சிக்கினார்.
மரண விசாரணை அதிகாரி யான ஆதம் நக்கோடா, தாழ் வாரத்தை சாய்வுப் பாதை என்று எப்படி டான் நினைத்தார் என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த திரு அப்துல் ரஹ்மான், மேடை கட்டுப்பாடுகளை அவர் பயன் படுத்தவில்லை, விளிம்பில் இருப்பதையும் அவர் கவனிக்க வில்லை என்று சொன்னார்.

