3,953 வீடுகள் விற்பனைக்கு

காலாங்/வாம்போவில் மையப் பகுதி அரசு முன்மாதிரி திட்ட பிடிஓ வீடுகள் கட்டப்படும்

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் மொத்­தம் 3,953 பிடிஓ வீடு­களை விற்­பனைக்கு விட்டுள்ளது. அவற்­றில் காலாங்/வாம்­போ­வில் உள்ள 398 வீடு­களும் உள்­ள­டங்­கும். வீவக நேற்று இதனை அறி­வித்­தது.

காலாங்/வாம்போ வீடு­கள், மையப் பகுதி அர­சாங்க முன்­மாதிரி வீடு­கள் திட்­டத்­தின்­கீழ் விற்­பனைக்கு விடப்படும் இரண்­டாம் கட்ட வீடு­கள் ஆகும். இவற்றை மறு­விற்­பனைக்கு உட்­படுத்­தும்­போது 6% மானி­யத்தைத் திருப்­பிச் செலுத்த வேண்டி இருக்­கும்.

புதி­தாக விற்­ப­னைக்கு கொடுக்­கப்­படும் வீடு­கள் நான்கு குடி­யிருப்­புப் பேட்­டை­களில் கட்­டப்­படும் ஆறு வீட்டு திட்­டங்­களில் அமைந்து இருக்­கும். இந்த ஆண்­டில் முதன்­மு­த­லாக அந்த வீடு­கள் விற்­பனைக்குக் கொடுக்­கப்­ப­டு­கின்­றன.

அந்த வீடு­க­ளின் சாவி­யைப் பெற சுமார் மூன்று முதல் ஐந்­தாண்­டு­கள் காத்­தி­ருக்கவேண்­டும். காலாங்/வாம்போ வீடு­கள் 33 மற்­றும் 47 மாடி­க­ளைக் கொண்ட இரு கட்­ட­டங்­க­ளைக் கொண்­டுள்ள ஒரே புளோக்கை சேர்ந்த மூவறை, நான்­கறை வீடு­க­ளாக இருக்­கும்.

கிங் ஜார்­ஜஸ் அவென்யூ, சையது ஆல்வி ரோடு, ரோச்­சோர் கெனால் ஆகி­ய­வற்றை எல்­லை­களா­கக் கொண்டு அந்த இடம் அமைந்துள்ளது.

இத்­த­கைய புது­மா­திரி வீடு­களை ரோச்­சோ­ரில் கட்­டு­வ­தற்­கான முதல் திட்­டம் சென்ற ஆண்டு நவம்­ப­ரில் அறி­விக்­கப்­பட்­டது.

புதி­தாக கட்­டப்­படும் அந்த மூவறை வீட்­டின் விலை மானி­யம் இல்­லா­மல் $353,000 முதல் $462,000 வரை இருக்­கும். நாலறை வீட்­டின் விலை $488,000 முதல் $675,000 வரை இருக்­கும்.

இந்த விலை, ரோச்­சோர் பிடிஓ திட்ட வீடு­க­ளின் விலை­யை­விட குறைவு. காலாங்/வாம்போ வீடு­களின் தரைப்­ப­ரப்பு, புதி­தாக விற்­பனைக்கு வரும் பிடிஓ திட்ட வீடு­களின் தரைப்­ப­ரப்­பை­விட சிறி­ய­தாக இருக்­கும். இந்த வீடு­க­ளைப் பெற 59 மாதங்­கள் காத்­தி­ருக்க வேண்டி இருக்­கும் என்று மதிப்­பி­டப்­ப­டு­கிறது.

இந்த வீடு­கள் 2027 மூன்­றா­வது காலாண்­டில் கட்டி முடிக்க திட்­ட­மிடப்­ப­டு­கிறது.

இந்த வீடு­களை வாங்­கு­வோர் குறைந்­த­பட்­சம் 10 ஆண்­டு­கள் குடி­யி­ருந்­து­விட்டு பிற­கு­தான் வீட்டை பொதுச் சந்­தை­யில் விற்க முடி­யும்.

சாதா­ரண பிடிஓ வீடு­களை, ஐந்­தாண்டு குடி­யி­ருந்­த­பி­றகு விற்­க­லாம். மானி­யத்­தைத் திருப்பி கொடுக்க வேண்­டிய தேவை­யும் இல்லை.

கேலாங்­கில் டக்­கோட்டா கிரஸ்­டில் இடம்­பெ­றும் பிடிஓ திட்­டத்­தில் 443 ஈரறை, மூவறை, நான்­கறை வீடு­கள் கட்­டப்­படும். இவை மூன்று புளோக்­கு­களில் அமைந்திருக்­கும்.

ஈசூ­னில் முதிர்ச்­சி­ய­டை­யாத பேட்­டை­யில் இரண்டு பிடிஓ திட்ட வீடு­கள் கட்­டப்­படும். அந்­தத் திட்­டங்­களில் 987 மற்­றும் 852 வீடு­கள் இருக்­கும். மற்ற வீடு­க­ளு­டன் ஒப்பிடு­கை­யில் இந்த வீடு­க­ளின் விலை குறை­வாக இருக்­கும். அதிக காலம் காத்­தி­ருக்­க­வும் தேவை­யில்லை.

தெங்­கா­வில் இரண்டு பிடிஓ திட்­டங்­களில் 713 வீடு­களும் 560 வீடு­களும் கட்­டப்­படும். இந்த வீடு­களைப் பெற 36 மாதங்­கள் காத்­தி­ருக்க வேண்டி இருக்­க­லாம்.

வரும் மே மாதம் புக்­கிட் மேரா, ஜூரோங் வெஸ்ட், கிம் மோ, தோ பாயோ, ஈசூ­னில் சுமார் 5,300 வீடு­கள் விற்­ப­னைக்குக் கிடைக்கும்.

அங் மோ கியோ, புக்­கிட் மேரா, சுவா சூ காங், ஜூரோங் ஈஸ்ட், குவீன்ஸ்­ட­வுன், உட்­லண்ட்ஸ் ஆகிய பகு­தி­களில் ஆகஸ்ட்­டில் மேலும் 6,300 முதல் 6,800 வீடு­கள் விற்­பனைக்கு வரும்.

வீவக இந்த ஆண்­டி­லும் அடுத்த ஆண்­டி­லும் ஒவ்­வோர் ஆண்­டும் 23,000 வரையிலான பிடிஓ திட்ட வீடு­களை விற்­ப­னைக்கு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!