கிளாடிஸ் லி வென் ஜிங், 27, என்ற சிங்கப்பூர் மாது கைகலப்பு தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் 2021 மார்ச்சில் உட்லண்ட்ஸ் போலிஸ் பிரிவில் ஒரு சிறை யில் வைக்கப்பட்டு இருந்தார்.
அப்போது துணை காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேரை அவர் கடித்துவிட்டார். தன்னைக் கட்டுப்படுத்த முயன்ற அந்த அதிகாரிகளை அவர் எதிர்த்தார். காதலனுடன் பொது இடத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அவர், அதற்குப் பின் வெட்டுக்கத்தி ஒன்றைக் காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குற்றங்களுக்காக லிக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

