இரு ஆடவர்கள் ஜனவரியில் தனித்தனியான இரண்டு இணைய வர்த்தக மோசடி களில் பலரை ஏமாற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த இருவரையும் அடையாளம் கண்ட உட்லண்ட்ஸ் காவல்துறை அதிகாரிகள், விசா ரணைக்காக அவர்களைக் கைது செய்துள்ளதாக காவல்துறை கூறியது.
ஒரு மோசடியில் மூன்று பேர் ஏறத்தாழ மொத்தம் $27,000 தொகையை 17 வயது இளையரிடம் இழந்து விட்டதாகவும் அந்த மோசடிப்பேர்வழி போலியான கைப்பைகளை விற்று அவர்களை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
பிளேஸ்டேஷன் 5 கருவியை விற்பதாகச் சொல்லி இருவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களை 25 வயது நபர் ஏமாற்றியதாகத் தெரிகிறது.

