தொடர்ச்சியான பல வாடகை கார் மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 30 வயது ஆடவரை புதன்கிழமை காவல்துறை கைது செய்தது.
வாடகைக்கு கார் கிடைக்கும் என்று விளம்பரம் செய்திருந்த இணைய விற்பனையாளர் ஒருவரிடம் தாங்கள் ஏமாந்துவிட்டதாக சென்ற ஆண்டு ஜூன் மாதத்திற்கும் டிசம்பருக்கும் இடையில் போலிசிடம் பல புகார்கள் தாக்கலாயின.
அவற்றின் தொடர்பில் நடந்த புலன் விசாரணையின் விளைவாக அந்தச் சந்தேகநபர் கைதானார். அவர் மீது இன்று குற்றம் சுமத்தப்படும் என்று நேற்று காவல்துறை தெரிவித்தது.

