அப்பர் புக்கிட் தீமா கால்வாயில் இரட்டையர் மரணம்: தந்தைமீது இரண்டாவது கொலைக் குற்றச்சாட்டு

1 mins read
fd4d1aa5-0957-44a2-a1c9-daeb30c82cfb
சேவியர் யாப்மீது முன்னதாக ஜனவரி 24ஆம் தேதி குற்றஞ்சாப்பட்டிருந்தது. -

அப்பர் புக்கிட் தீமா கால்வாயில் 11 வயது இரட்டைச் சகோதரர்கள் மாண்டு கிடந்த சம்பவத்துடன் தொடர்பில், அவர்களுடைய தந்தைமீது வெள்ளிக்கிழமை காலை (பிப்ரவரி 18) இரண்டாவது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட் பகுதி விளையாட்டு இடத்தில் உள்ள மூடப்பட்ட கால்வாயில், ஜனவரி 21ஆம் தேதி மாலை 4.23 மணிக்கும் 6.18 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஆஸ்டன் யாப் காய் ஷெர்ன் எனும் சிறுவனைக் கொலை செய்ததாக சேவியர் யாப் ஜுங் ஹவ்ன், 48, எனும் அந்த ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஈதன் யாப் ஈ செர்ன் எனும் மற்றொரு சிறுவனைக் கொன்றதாக அந்த சிங்கப்பூரர்மீது சுமத்தப்பட்டிருந்த முதல் குற்றச்சாட்டும் வெள்ளிக்கிழமை திருத்தப்பட்டது.

அவர் கொலை செய்ததாகக் கூறப்படும் நேரம் மாலை 4.23 மணிக்கும் 6.18 மணிக்கும் இடைப்பட்ட நேரமாக மாற்றப்பட்டது.

சேவியர் யாப்மீது ஜனவரி 24ஆம் தேதி குற்றஞ்சாப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்