வரும் ஆண்டுகளில் வர்த்தகங்களிலும் ஊழியர்களிடையிலும் மின்னிலக்க ஆற்றலை மேம்படுத்தும் திட்டங்களுக்கு கூடுதலாக 200 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படும்.
மின்னிலக்கத் தளங்களை மேலும் நன்றாகப் பயன்படுத்தி அனைத்துலகச் சந்தைகளைச் சென்றடைய உதவும் 'குரோ டிஜிட்டல் ஸ்கீம்' எனும் மின்னிலக்க வளர்ச்சித் திட்டம் இவற்றில் ஒன்று.
'டெக்ஸ்கில்ஸ் எக்செலரேட்டர்' என்றழைக்கப்படும் தொழில்நுட்பத்துறை திறன் வளர்ச்சி, வேலை அமர்வுத் திட்டம் மற்றொன்று ஆகும்.
சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியலுக்காக தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் திறன்கள் உள்ள ஊழியரணியை வளர்ப்பது இந்தத் திட்டத்தின் நோக்கம்.


