புதிய எஸ் பாஸ் விண்ணப்பங்களுக்கு தகுதி பெறும் குறைந்த பட்ச ஊதியம் தற்போது இருக்கும் $2,500லிருந்து $3,000க்கு உயர்த்தப்படும். இந்த மாற்றம் வரும் செப்டம்பர் மாதம் அமலாக்கப்படும். நிதித்துறைக்கு இந்த தகுதி பெறும் குறைந்த பட்ச ஊதியம் இன்னும் கூடுதலாக $3,500 ஆக நிர்ணயிக்கப்படும்.
எஸ் பாஸ் வைத்திருக்கும் மூத்த ஊழியர்களின் தகுதி பெறும் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்படும். இதனைத் தொடர்ந்து புதிய எஸ் பாஸ் விண்ணப்பங்களுக்கான குறைந்த பட்ச ஊதியம் அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதமும் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமும் மீண்டும் உயர்த்தப்படும். இதன் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
எஸ் பாஸ் தகுதி உடையோரின் எண்ணிக்கையை சமாளிக்க முதல் கட்ட தீர்வை 2025க்குள் படிப்படியாக $330லிருந்து $650க்கு உயர்த்தப்படும்.

